வெனிசுலாவின் எதிர்க்கட்சித் தலைவரான ஜூவான் குவைடோ இந்த ஆண்டு ஜனவரியில் தன்னை அதிபராகத் அறிவித்துக்கொண்டார். இதற்கிடையில் பல நாடுகளும் தற்போது அதிபராக இருக்கும் மதுரோவை பதவி விலகும்படி அறிவித்தன. இதை மதுரோ மறுத்துவருகிறார். இவருக்கு ஆதரவாக சீனா, ரஷ்யா ஆகிய நாடுகள் களமிறங்கியுள்ளன.
வெனிசுலாவில் நிலவும் குழப்பம் கவலையளிக்கிறது- உலக வங்கி - mudro
வாஷிங்டன்: வெனிசுலாவில் நிலவும் உள்நாட்டுக் குழப்பம் வருத்தமளிப்பதாகவும், இது குறித்த வெகு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உலக வங்கி தெரிவித்துள்ளது.
ஜூவான் குவைடோ
இந்நிலையில், வெனிசுலாவில் நிலவும் உள்நாட்டுக் குழப்பம் வருத்தமளிப்பதாகவும், லத்தீன் அமெரிக்க நாடுகளின் வளர்ச்சிக்கு ஊறுவிளைப்பதாகவும் உலக வங்கி தெரிவித்துள்ளது.
நேற்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய உலக வங்கியின் தலைவர் டேவிட் மல்பஸ், ஜூவான் குவைடோவை அதிபராக அங்கீகரிப்பது குறித்து வங்கியின் பங்குதாரர்கள் முடிவெடுப்பார்கள் என்று தெரிவித்தார்.