அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு கடந்த நவம்பர் 3ஆம் தேதி நடைபெற்றது. அதைத்தொடர்ந்து கடந்த மூன்று நாள்களாக வாக்கு எண்ணிக்கைத் தொடர்ந்து நடைபெற்றுவந்த நிலையில், ஜோ பைடன் நேற்று(நவ.07) அதிபர் தேர்தலில் வெற்றிபெறத் தேவையான 270 இடங்களையும்விட கூடுதலான இடங்களைப் பெற்று, வெற்றி பெற்றார்.
மேலும், ஜனநாயகக் கட்சி வேட்பாளர் கமலா ஹாரிஸ் துணை அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதன் மூலம் 239 ஆண்டுகள் பழைமயான ஜனநாயக நாட்டில் முதல் பெண் அதிபர் என்ற சிறப்பையும் கமலா ஹாரிஸ் பெற்றார்.
இந்நிலையில் வெற்றி பெற்றவுடன் மக்களிடம் பேசிய அவர், "இந்த வெள்ளை மாளிகையில் பொறுப்பு ஏற்கும் முதல் பெண்ணாக நான் இருக்கலாம், ஆனால் நிச்சயம் கடைசிப் பெண்ணாக இருக்க மாட்டேன்.