பிரஸ்ஸல்ஸ் (பெல்ஜியம்):பெல்ஜியம் நாட்டில் உள்ள பெண் ஒருவருக்கு, ஒரு பூங்காவில் உள்ள மனித குரங்கைப் பார்க்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
ஏன் தெரியுமா? அப்பெண்ணுக்கும், மனித குரங்குக்கும் காதல் ஏற்பட்டதால்தான்.
ஆடெய் டிம்மர்மன்ஸ்(38) என்ற பெண், பெல்ஜியமில் உள்ள உயிரியல் பூங்காவிற்கு கடந்த 4 ஆண்டுகளாக செல்வதை வழக்கமாக வைத்துள்ளார். அங்கு, சீட்டா என்ற மனிதக் குரங்குடன் கண்ணாடிக்கு மறுபுறம் இருந்து அவர் பேசிவந்துள்ளார்.
நாளடைவில், மனிதக்குரங்கு சீட்டாவுக்கும், ஆடெய் டிம்மர்மன்ஸுக்கும் காதல் மலர்ந்துள்ளது.
காதலுக்காக ஃப்ரெண்ட்ஸை டீலில் விட்ட சீட்டா குரங்கு
இதனால், சீட்டா மற்ற மனிதக் குரங்குகளுடன் சேர்வதில்லை, மற்ற மனிதக் குரங்குகள் சீட்டாவை உடன் சேர்ப்பதில்லை.
சீட்டாவின் நடவடிக்கைகளைக் கண்காணித்த பூங்கா நிர்வாகம், ஆடெய் டிம்மர்மன்ஸ் காட்டிய நெருக்கமே சீட்டாவின் நடவடிக்கைக்குக் காரணம் என்பதை கண்டறிந்தனர். தொடர்ந்து, சீட்டாவைப் பார்க்க, ஆடெய் டிம்மர்மன்ஸுக்கு பூங்கா நிர்வாகம் அனுமதி மறுத்துள்ளது.
கண்ணீர் விட்ட காதலி
இதனால், வருத்தம் அடைந்த அப்பெண், ஊடகவியலாளரிடம் பேசுகையில், "நான் சீட்டாவை காதலித்தேன். அவனும்(சீட்டா) என்னை காதலித்தான். பல சுற்றுலாப் பயணிகளை சீட்டாவைப் பார்க்க அனுமதிக்கும்போது, என்னை மட்டும் அனுமதிக்க மறுப்பது ஏன்?" என கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.
"சீட்டா மற்ற மனித குரங்குகள் போல் இருக்கவேண்டும் என்பதாலேயே ஆடெய் டிம்மர்மன்ஸுக்கு அனுமதி மறுத்தோம்" என பூங்கா நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.
இதையும் படிங்க: மைதானத்தில் மலர்ந்த காதல்; இளஞ்சிட்டுகளுக்கு ஹார்ட்டை பறக்கவிட்ட நெட்டிசன்கள்