மருந்துகளின் பட்டியலிலிருந்து ரெம்டெசிவிர் நீக்கம்! - ரெம்டெசிவிர்
21:42 November 20
கரோனா பெருந்தொற்று சிகிச்சைக்காக பயன்படுத்தப்பட்டு வந்த ரெம்டெசிவிர் மருந்தை, உலக சுகாதார அமைப்பு மருந்துகளின் பட்டியலிலிருந்து நீக்கியுள்ளது.
கரோனா பெருந்தொற்று உலகையே ஆட்டிப்படைத்து வந்த நிலையில், கடந்த சில மாதங்களாக கிலியட் நிறுவனத்தின் ரெம்டெசிவிர் மருந்து கரோனா சிகிச்சைக்காக பயன்படுத்தப்பட்டு வந்தது. இதற்கிடையே, இந்த மருந்தை பயன்படுத்த வேண்டாம் என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்திருந்தது.
இந்நிலையில், ரெம்டெசிவிர் மருந்தை உலக சுகாதார அமைப்பு மருந்துகளின் பட்டியலிலிருந்து நீக்கியுள்ளது. இதுகுறித்து உலக சுகாதார அமைப்பின் ஊடக பிரதிநிதி தாரிக் ஜசரேவிக் கூறுகையில், "கரோனா சிகிச்சைக்கான வழிகாட்டுதல்களின்படி, ரெம்டெசிவிர் மருந்தை கொள்முதல் செய்ய வேண்டாம் என உலக நாடுகளுக்கு பரிந்துரை செய்துள்ளோம்" என்றார்.
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கரோனாவால் பாதிக்கப்பட்ட போது, அவருக்கு ரெம்டெசிவிர் மருந்தே சிகிச்சைக்காக வழங்கப்பட்டது. 50 நாடுகளில், இந்த மருந்து பயன்படுத்தப்பட்டு வந்தது. இந்தியாவில் ரெம்டெசிவிர் மருந்தின் விநியோகத்தை அதிகப்படுத்தும் நோக்கில் பல மருந்து நிறுவனங்களுடன் கிலியட் நிறுவனம் ஒப்பந்தம் மேற்கொண்டது.