தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

அடுத்தாண்டு இறுதிக்குள் கரோனா தடுப்பு மருந்துகள் - உலக சுகாதார அமைப்பு - உலக சுகாதார அமைப்பின் (WHO) தலைமை விஞ்ஞானி டாக்டர்  சௌமியா சுவாமிநாதன்

லண்டன்: சுமார் இரண்டு பில்லியன், கோவிட்-19 தடுப்பூசியிகள் அடுத்த ஆண்டு இறுதிக்குள் தயாராக இருக்கும் என்று உலக சுகாதார அமைப்பின் (WHO) தலைமை ஆராய்ச்சியாளர் டாக்டர்  சௌமியா சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.

அமைப்பின் (WHO) தலைமை விஞ்ஞானி டாக்டர்  சௌமியா
அமைப்பின் (WHO) தலைமை விஞ்ஞானி டாக்டர்  சௌமியா

By

Published : Jun 19, 2020, 1:36 PM IST

லண்டன்: சுமார் இரண்டு பில்லியன் கோவிட்-19 தடுப்பூசிகள் அடுத்தாண்டு இறுதிக்குள் தயாராக இருக்கும் என்று உலக சுகாதார அமைப்பின் (WHO) தலைமை ஆராய்ச்சியாளர் மருத்துவர் சௌமியா சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.

ஜெனீவாவிலிருந்து ஊடகங்களுக்கு உரையாற்றிய அவர், "தற்போது, கரோனாவைக் கட்டுப்படுத்தும் உறுதிசெய்யப்பட்ட தடுப்பூசி இல்லை, ஆனால் இந்த ஆண்டு இறுதிக்குள் ஒன்று அல்லது இரண்டு தடுப்பு மருந்துகள் கண்டறியப்படும் என நம்புகிறோம்.

இதற்கான தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்படும் பட்சத்தில் அடுத்தாண்டு இறுதிக்குள் 200 கோடி தடுப்பு மருந்துகள் தயார் நிலையில் இருக்கும் என நம்புகிறோம்" என்றார்.

கோவிட்-19ஐ ஏற்படுத்தும் SARS-CoV-2 க்கு எதிரான தடுப்பூசிகளை உருவாக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இது உருவாக குறைந்தபட்சம் 12-18 மாதங்கள் ஆகலாம்.

உலகளாவிய மருந்து நிறுவனமான ஃபைசர், கோவிட்-19ஐ தடுப்பதற்கான தடுப்பூசி அக்டோபர் இறுதிக்குள் தயாராக இருக்கக்கூடும் என்று நம்புவதாகக் கடந்த மாதம் கூறியிருந்தது. சோதனைகளின் பல்வேறு கட்டங்களில் தற்போது 100-க்கும் மேற்பட்ட தடுப்பூசிகள் உள்ளன.

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களால் உருவாக்கப்பட்ட அஸ்ட்ராஜெனெகாவின் கோவிட்-19 தடுப்பூசி, ஒரு வருடத்திற்கு இந்த நோயிலிருந்து பாதுகாக்கும் என்று பிரிட்டிஷ் மருந்து தயாரிப்பாளரின் தலைமை நிர்வாக அலுவலர் தெரிவித்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details