உலக சுகாதார அமைப்பின் வருடாந்திர மாநாடு ஜெனீவாவில் நடைபெற்றது. கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நபருடன் தொடர்பில் இருந்ததால் தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ள உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம், இந்த மாநாட்டில் தனது வீட்டிலிருந்து காணொலி வாயிலாகக் கலந்துகொண்டு உரையாற்றினார்.
அமெரிக்க அதிபருக்கு வாழ்த்து தெரிவித்த உலக சுகாதார அமைப்பின் தலைவர்! - கமலா ஹாரிஸ்
ஜெனீவா : அமெரிக்கா அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜோ பைடன், துணை அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கமலா ஹாரிஸ் ஆகியோருக்கு உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அப்போது பேசிய அவர், “பரஸ்பர நம்பிக்கை மற்றும் பரஸ்பர புரிந்துணர்வு ஆகியவற்றின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்ட தலைமையில் ஒன்றிணைந்து கரோனா தொற்றுநோயை நாம் முடிவுக்குக் கொண்டுவர வேண்டும். அமெரிக்க அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜோ பைடன், துணை அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கமலா ஹாரிஸ் ஆகியோருக்கு வாழ்த்துகள்.
புதிய சிந்தனைகளுக்கு முன்னுரிமை அளித்து, ஒருங்கிணைந்த முயற்சிகளுக்கு ஆதரவாக செயல்பட்டு பெருந்தொற்றை எதிர்த்து நாம் அனைவரும் போராட வேண்டும். ஆரோக்கியமற்ற பாதுகாப்பற்ற குழப்பத்திற்குள் நம்மைத் தள்ளிய தொற்றுநோய், புவிசார் அரசியல் பிளவுகளிலிருந்து உலகம் குணமடைய வேண்டிய நேரம் இது” என்று கருத்து தெரிவித்துள்ளார்.