அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற ஜோ பைடன், ஜனவரி மாதத்தில் முறையாக பதவியேற்க உள்ளார். ஆனால் நடப்பு அதிபரான ட்ரம்ப் ஜனநாயக கட்சியின் வெற்றியை ஒப்புக்கொள்ளாமல் தொடர் குற்றசாட்டுகளை முன்வைத்து வருகிறார். புதிய அதிபர் தேர்வு செய்யப்பட்டதும், நிர்வாக மாற்ற நடவடிக்கைகளில், ஜி.எஸ்.ஏ எனப்படும் பொது சேவை நிர்வாகம் அமைப்பு ஈடுபட வேண்டும். ஆனால், ட்ரம்ப்பால் நியமிக்கப்பட்டுள்ள இந்த அமைப்பின் நிர்வாகி எமிலி மர்பி, இதுவரை முறைப்படி எதையும் அறிவிக்கவில்லை. இந்நிலையில், நிர்வாக மாற்றம் தொடர்பான நடவடிக்கைகளுக்கு தயாராக இருப்பதாக பைடன் குழுவுக்கு எமிலி மர்பி கடிதம் எழுதியுள்ளார்.
அதிபர் மாளிகை தகவல்கள் ஜோ பைடனுக்கு பரிமாற்றம்!
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள ஜோ பைடனுக்கு, அதிபர் மாளிகையின் தினசரி தகவல்களை அதிகாரப்பூர்வமாக அறிந்துக்கொள்ளும் அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.
ஜோ பைடன்
இந்த நிர்வாக மாற்றத்தை தொடர்ந்து, அதிபர் மாளிகையின் தினசரி தகவல்களை அறிந்துகொள்ளும் அதிகாரமும் அதிகாரப்பூர்வமாக ஜோ பைடனுக்கு மாற்றப்பட்டுள்ளது. அதிபர் டெய்லி ப்ரீஃபிங் என்பது தேசிய பாதுகாப்பு மற்றும் நாட்டின் இன்றைய முக்கிய நிகழ்வுகள், தகவல்கள் அடங்கியிருக்கும். பல ரகசிய தகவல்களும் டெய்லி ப்ரீஃபிங்கில் இடம்பெற்றிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.