பரபரப்பாக சென்று கொண்டிருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை யாருக்கு சாதகமாக இருக்கும் என்பதில் சிக்கல் உள்ளது. ட்ரம்ப், பிடன் இருவருக்குமே சாதகமில்லாமல் இந்த ரேஸ் முடிய வாய்ப்புள்ளதா? என்றால் உள்ளது. இருவரில் யாரவது ஒருவர் 270 இடங்களை பெற்றாக வேண்டிய சூழல் நிலவுகிறது.
டர்ம்ப், பிடன் இருவருக்கும் மேஜிக் நம்பர் கிடைக்கவில்லை என்றால்? - ஜோ பிடன்
அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தற்போதைய நிலவரப்படி ஜனநாயகக் கட்சி வேட்பாளரான ஜோ பிடன் வெற்றிபெற அதிக வாய்ப்புள்ளது என கூறப்படுகிறது. எனினும் மேஜிக் நம்பர் 270 (பெரும்பான்மை) யாருக்கு கிடைக்கும் என்பதில் இழுபறி இருக்கவே செய்கிறது. ஒருவேளை இருவரும் பெரும்பான்மையை எட்ட முடியவில்லை என்றால் முடிவு என்ன என்பது பற்றி இத்தொகுப்பு விவரிக்கிறது.
அதிபர் வேட்பாளர்களில் யாராவது ஒருவர் 269 இடங்களை தாண்டவில்லை என்றால், அடுத்த அதிபர் யார் என்பதை பிரதிநிகள் சபை முடிவு செய்யும். துணை அதிபர் யார் என்பதை மேல் சபை முடிவு செய்யும். வாக்கு எண்ணிக்கை முடிந்த அன்றே அதிபர் யார் என தெரிய வேண்டிய அவசியமில்லை. டிசம்பர் 14ஆம் தேதி எலக்டோரியல் காலேஜ் ஒன்றுகூடி அடுத்த அதிபரை முடிவு செய்யும்.
ட்ரம்ப் அல்லது பிடன் வெற்றிபெற 26 மாகாணங்களின் பிரதிநிதிகள் ஆதரவை பெற வேண்டும். இதற்கு முன்பு 1800ஆம் ஆண்டுதான் இப்படியான ஒரு சூழல் ஏற்பட்டது. அப்போது ஜான் ஆடம்ஸை எதிர்த்து தாமஸ் ஜெஃபர்சன் வெற்றிபெற்றார்.