தமிழ்நாடு

tamil nadu

இம்ரான் கான் ஐநாவில் காஷ்மீர் குறித்து என்ன பேசினார்?

By

Published : Sep 25, 2021, 10:42 PM IST

இந்தியாவுடனான காஷ்மீர் பிரச்னையை தீர்க்க மூன்று நிபந்தனைகளை பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் ஐ.நா பொது சபையில் தெரிவித்துள்ளார்.

இம்ரான் கான்
இம்ரான் கான்

ஐக்கிய நாடுகளின் பொது சபையில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் காணொலி வாயிலாக இன்று (செப். 25) உரையாற்றினார்.

அவர் பேசியதாவது, " பாகிஸ்தான், இந்தியா மற்றும் அண்டை நாடுகளிடம் அமைதியையே விரும்புகிறது. நிலையான அமைதிதான் ஜம்மு காஷ்மீர் விவகாரத்திற்கு ஒரு முடிவை அளிக்கும்.

மூன்று நிபந்தனைகள்

பாகிஸ்தானுடன் அர்த்தமுள்ள மற்றும் பிரச்னைக்கு முடிவை நோக்கிய அணுகுமுறைக்கு, சாதகமான சூழலை உருவாக்க வேண்டிய பொறுப்பு இந்தியாவின் கையில் உள்ளது. காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவுடனான அமைதியான உறவை ஏற்படுத்த மூன்று நிபத்தனைகளை கூறுகிறேன்.

ஒன்று, அங்கு கடந்த 2019 ஆகஸ்ட் 5ஆம் தேதி கொண்டுவரப்பட்ட ஒருதலைபட்ச மற்றும் சட்ட விரோத நடவடிக்கைகளைத் திரும்ப பெறுதல்; இரண்டாவது, காஷ்மீர் மக்களுக்கு எதிரான அதன் மனித உரிமை மீறல், ஒடுக்குமுறை போன்றவற்றை நிறுத்துதல்; மூன்றாவது ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசத்தில் நடைபெறும் வேற்று மக்கள் குடியேற்றத்தை நிறுத்துதல் மற்றும் மாற்றியமைத்தல் என்றார்.

காணொலி வாயிலாக பேசிய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்

இதற்கு ஐ.நா சபையின் இந்திய முதன்மைச் செயலர் சினேகா துபே, ஜம்மு-காஷ்மீர், லடாக் யூனியன் பிரதேசம் இரண்டும் இந்தியாவின் தவிர்க்க முடியாத பகுதிகளாக இருந்தது, இனியும் இருக்கும் என பதிலடி கொடுத்தார்.

இதையும் படிங்க: ஐநா பொதுச்சபையில் பாகிஸ்தானை விளாசிய இந்தியா!

ABOUT THE AUTHOR

...view details