பொருளாதாரத்தில் 2019ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசை இந்தியாவின் பூர்வக்கூடியான அமெரிக்காவில் வசித்துவரும் அபிஜித் பானர்ஜிக்கும் அவரது மனைவியான எஸ்தர் டஃப்லோவுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அபிஜித் பானர்ஜி நோபல் பரிசு நிறுவனத்தில் அளித்த பேட்டியில், 'நேற்று காலை 6 மணியளவில் அவருக்கும் அவர் மனைவிக்கும் ஸ்டாக்ஹோமில் நோபல் பரிசு அறிவித்ததை அறிந்த பிறகு, உடனே அவர் தூக்கத்தைத் தொடர திரும்ப படுக்கறைக்கு சென்றுவிட்டதாக' நகைச்சுவையுடன் கூறினார்.
மேலும் 'தான் காலையில் சீக்கிரம் எழுந்திருக்கும் நபர் கிடையாது என்றும்! தூக்கத்தைத் தொடராமல் போவது உடம்பில் நடத்தப்படும் வன்முறை என்பதால் தூங்க சென்றுவிட்டதாகவும்' அபிஜித் பானர்ஜி நக்கலாக கூறியுள்ளார். 'இருப்பினும் இந்த செய்தி இந்தியாவில் இருந்து ஐரோப்பா வரை தெரிந்ததால் நண்பர்கள், உறவினர்கள் என அனைவரும் தொடர்ந்து தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியதால், நாங்கள் இருவரும் தூக்கத்தை அதற்கும் மேல் தொடர முடியாமல் கைவிட்டதாகவும்' நகைப்புடன் தெரிவித்தார்.