அமெரிக்காவின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள ஓரிகான் மாகாணத்தின் காட்டுப்பகுதிகளில் ஏற்பட்ட தீ பல ஏக்கர் கணக்கிலான காடுகளை முற்றிலுமாக அழித்துள்ளது. இந்தக் காட்டுத்தீ, தற்போது தெற்கு ஓரிகான் காட்டுப்பகுதியை ஒட்டியுள்ள நகரங்களையும் சூழ்ந்துள்ளது.
இதையடுத்து நகர் பகுதிகளில் வசித்து வந்த சுமார் 40 ஆயிரம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு புலம்பெயர்ந்துள்ளனர். மேலும், இந்தக் காட்டுத்தீயில் சிக்கி இதுவரை ஒன்பது பேர் உயிரிழந்துள்ளனர். பெரும்பாலான வீடுகள் சேதமடைந்துள்ளன.