இது குறித்து அவர் கூறுகையில், "ஆப்கானிஸ்தான் அரசு நிர்வாகத்தில் நிலவிவரும் ஊழல் உள்ளிட்ட காரணங்களுக்காக அந்நாட்டின் பெரும் கட்டமைப்பு திட்டத்துக்கு அமெரிக்க வழங்கவிருந்த ரூ.700 கோடி நிதியுதவியை நாங்கள் திரும்பப்பெறுகிறோம்" என்றர்.
ஆப்கானுக்கு வழங்கவிருந்த ரூ.700 கோடியை திரும்பப்பெறும் அமெரிக்கா! - afghanistan aid
காபூல்: ஆப்கானிஸ்தான் வளர்ச்சித் திட்டங்களுக்கு அமெரிக்க வழங்கவிருந்த ரூ.700 கோடி நிதியுதவியை திரும்பப்பெறுவதாக அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் மைக்கேல் பாம்பியோ தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தானில் நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை இல்லாத காரணத்தால் அவர்களுக்கு மேலும் வழங்கவிருந்த ரூ.430 கோடி நிதியுதவியைத் தற்காலிகமாக நிறுத்திவைக்கிறோம் என்றும் மைக்கேல் பாம்பியோ குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து பேசிய பாம்பியோ, "ஆப்கான் மக்களின் வளர்ச்சிக்கு உதவும் உலக நாடுகளின் முயற்சிக்கு அந்நாடு முறையாக ஒத்துழைக்காததால் ஆப்கானிஸ்தான் கண்காணிப்பு மற்றும் மதிப்பீட்டுக் குழுவுக்கு இந்த ஆண்டு இறுதியோடு நிதியுதவி நிறுத்தப்படும்" என திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.