தமிழ்நாடு

tamil nadu

By

Published : Dec 21, 2021, 11:46 AM IST

Updated : Dec 21, 2021, 1:48 PM IST

ETV Bharat / international

ஒமைக்ரான் தொற்று - அமெரிக்காவில் முதல் உயிரிழப்பு

அமெரிக்காவில் ஒமைக்ரான் தொற்று காரணமாக ஒருவர் இன்று (டிசம்பர் 21) உயிரிழந்தார்.

ஒமைக்ரான் தொற்று
ஒமைக்ரான் தொற்று

கரோனா தொற்றின் இரண்டாம் அலை குறைந்துவரும் நிலையில், உலகம் முழுவதும் மெல்ல மெல்ல இயல்பு வாழ்க்கை திரும்பி வந்தது. இதனிடையே கரோனா உருமாற்றம் அடைந்து டெல்டா, டெல்டா பிளஸ் என்று மக்களிடையே பீதியை கிளப்பியது. இந்த தொற்றுகளும் ஓய்ந்த நிலையில், உருமாறிய ஒமைக்ரான் வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது.

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்ட 50 வயது மதிக்கத்தக்க நபர் இன்று (டிசம்பர் 21) உயிரிழந்தார். இவர் தடுப்பூசி செலுத்தி கொள்ளாமல் இருந்த நிலையில், ஒமைக்ரான் தொற்று ஏற்பட்டு உயிரிழந்தார் என ஹாரிஸ் கவுண்டி பப்ளிக் ஹெல்த் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக மக்கள் அனைவரும் உடனடியாக கரோனா தடுப்பூசி மற்றும் பூஸ்டர் டோஸ்களை எடுத்து கொள்ளுமாறு அமெரிக்க சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

இதையும் படிங்க:Tablet: கரோனாவுக்கு மாத்திரை கண்டுபிடித்து அசத்திய நிறுவனம்!

Last Updated : Dec 21, 2021, 1:48 PM IST

ABOUT THE AUTHOR

...view details