அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் இரண்டு நாள் அரசு முறை பயணமாக நாளை மறுநாள் (திங்கள்கிழமை) இந்தியா வருகிறார். இதுதொடர்பான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்றும் வரும் வேளையில், ட்ரம்ப்பின் பயணம் குறித்து வெள்ளை மாளிகையில் பணிபுரியும் உயர் அலுவலர் ஒருவர் செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது, "அதிபர் ட்ரம்ப்பின் இந்தியப் பயணம் இருநாடுகளுக்கும் இடையிலான நீடித்த, வலுவான உறவை உணர்த்தும் விதமாக அமைந்துள்ளது. இருநாடுகளுக்கும் பொதுவான ஜனநாயக பாரம்பரியம், மக்களின் நெருக்கம், ராஜதந்திரம் ஆகியவை இந்த உறவின் அடித்தளமாக விளங்குகிறது. அதிபர் ட்ரம்ப், பிரதமர் நரேந்திர மோடி இடையே நிலவும் நெருக்கம் இந்த உறவுக்கு மென்மேலும் வலுசேர்ந்துள்ளது.