தேர்தல் களம்
கரோனா பெருந்தொற்றுக்கு இடையே நிறுத்திவைக்கப்பட்ட தேர்தல் பரப்புரையை அமெரிக்க அதிபர் ட்ரம்ப், கடந்த சனிக்கிழமை (ஜூன் 20) ஒக்லஹோமா மாகாணத்தில் தொடங்கிவைத்தார்.
ஆனால், யாரும் எதிர்பார்க்காத வகையில் தேர்தல் பரப்புரை நடந்த அரங்கில் பெரிதாகக் கூட்டம் கூடவில்லை. இது அதிபர் ட்ரம்ப்பையும், அவரது கட்சியினரையும் தர்மசங்கடத்துக்கு ஆளாக்கியது.
இதற்கிடையே, ட்ரம்ப்பின் முன்னாள் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டனின் 'தி ரூம் வேர் இட் ஹேப்பெண்ட்' (The Room Where It Happened) புத்தகம் செவ்வாய்க்கிழமை (ஜூன் 23ஆம் தேதி) வெளிவரவுள்ளது. ட்ரம்ப்பின் நிர்வாகத் திறமையைக் கேள்வி எழுப்புவதே இந்தப் புத்தகத்தின் சாரம்சமாகும்.
இப்படியாகப் பல சிக்கல்களை எதிர்கொண்டும்வரும் ட்ரம்ப் அவற்றை எப்படிச் சமாளிப்பது என்று தெரியாமல் குழம்பிப் போயுள்ள சூழலில், நியூயார்க், கென்டகி மாகாணங்களில் ஜூன் 23ஆம் தேதி பிரைமரி தேர்தல் (வேட்பாளர்களைத் தேர்ந்தெடுக்கும் தேர்தல்) நடைபெறவுள்ளது. கரோனா பெருந்தொற்றுக்கு இடையே நியாயமாகத் தேர்தல் நடத்த முடியுமா என்பதை
ஒக்லஹோமாவில் என்ன நடந்தது?
ஒக்லஹோமாவில் நடந்த ட்ரம்ப்பின் தேர்தல் பரப்புரைக்கு எதிர்பார்த்ததைவிட குறைந்தளவிலேயே கூட்டம் கூடியது. பரப்புரை நடந்த அரங்கே காலியாகக் காட்சியளித்தது. கூட்டத்தை ஈர்க்கும் ட்ரம்ப்பின் திறமையைஇது கேள்விக்குறியாக்கியுள்ளது.
இதனை நாம் எப்படி எடுத்துக்கொள்வது? கரோனா பெருந்தொற்று, நிறவெறிக்கு எதிரான போராட்டம், கேலி, கிண்டல் மீதான பயத்தால் கூட்டம் கூடவில்லையா, அல்லது ட்ரம்ப்பின் ஆதரவு அலை குறைந்துவருவதற்கான அறிகுறியாக இதனை நாம் பார்க்க வேண்டுமா?
ஆதரவாளர்களால் அரங்கை மூழ்கடிப்பதில் மிகுந்து விருப்பம் கொண்ட ஒரு அதிபருக்கு இது பெரும் அவமானமாக இருந்திருக்கும்.
வரும் நாள்களில் ட்ரம்ப்பின் தேர்தல் பரப்புரை அலுவலர்கள் ஒருவர் மீது ஒருவர் பழிசுமத்திக்கொள்வது அதிகரிக்கப் போகிறது.
வாக்களிப்பதில் பிரச்னை எழுமா?