தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

பைடனுக்கு எதிராக காய் நகர்த்திய ட்ரம்ப்: முடங்கிய சமூக வலைதள கணக்குகள் - Trump social media accounts locked

Donald Trump
டொனால்டு ட்ரம்ப்

By

Published : Jan 7, 2021, 8:49 AM IST

Updated : Jan 7, 2021, 10:20 AM IST

08:44 January 07

வன்முறையைத் தூண்டும் வகையில் செயல்பட்டதால் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பின் தனிப்பட்ட ட்விட்டர், இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதள கணக்குகள் முடக்கப்பட்டன.

வன்முறையைத் தூண்டும் வகையில் பேசியதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பின் தனிப்பட்ட ட்விட்டர், இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதள கணக்குகள் முடக்கப்பட்டன. அவருடைய இன்ஸ்டாகிராம் கணக்கு 24 மணி நேரமும், ட்விட்டர் மற்றும் ஃபேஸ்புக் உள்ளிட்ட இரண்டு கணக்குகளும் 12 மணி நேரமும் முடக்கம் செய்யப்பட்டன.

கடந்தாண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன், தற்போதைய பிரதமர் டொனால்டு ட்ரம்பிற்கு எதிராக போட்டியிட்டு வெற்றிபெற்றார். இந்த வெற்றியை அங்கீகரிக்கும் நடைமுறைகள் வாஷிங்டன்னில் உள்ள வெள்ளை மாளிகையில் நடைபெற்றுவந்தது.

இதனிடையே ட்ரம்ப் ஆதரவாளர்கள் நாடாளுமன்ற கட்டடத்திற்கு வெளியே திரண்டனர். நாடாளுமன்ற கட்டடத்தை முற்றுகையிட முயன்ற ட்ரம்ப் ஆதரவாளர்களை,  பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் கட்டுப்படுத்தினர். இதில் காவல் துறையினருக்கும், ட்ரம்ப் ஆதரவாளர்களுக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. இந்த நிலையைக் கட்டுக்குள் கொண்டு வர காவல் துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், பெண் ஒருவர் படுகாயமடைந்தார்.

வெள்ளை மாளிகை போராட்டக்களத்தில் ட்ரம்ப் பேசிய வீடியோவை தனது சமூகவலைதள பக்கத்தில் பதிவேற்றியதுடன், போராட்டம் தொடர்பான சில பதிவுகளும் செய்தார். அவை சமூகவலைதளங்களில் வேகமாக பரவியது. வன்முறையை ஊக்குவிக்கும் வகையில் இருந்த அந்த பதிவுகளை ட்விட்டர் நிர்வாகம் நீக்கியது. அதோடு ட்விட்டர் விதிகளை மீறியதற்காக அதிபர் டிரம்பின் @realDonaldTrump என்ற பக்கம் 12 மணி நேரம் முடக்கப்பட்டது. இதைப் போலவே, அவரது பிற சமூக வலைதள கணக்குகளும் வன்முறையை தூண்டும் வகையில் செயல்பட்டதால் முடக்கப்பட்டன.

இதையும் படிங்க:வெள்ளை மாளிகையில் துப்பாக்கிச் சூடு - ஆதரவாளர்கள் கலைந்து செல்ல ட்ரம்ப் அறிவுறுத்தல்!

Last Updated : Jan 7, 2021, 10:20 AM IST

ABOUT THE AUTHOR

...view details