2008 மும்பை தாக்குதலுக்கு மூலையாக இருந்து செயல்பட்ட லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பின் நிறுவனர் ஹஃபீஸ் சையத், பாகிஸ்தான் பயங்கரவாத தடுப்பு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். இதை இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் வரவேற்றுள்ளன.
இதுதொடர்பாக அமெரிக்கா அதிபர் ட்ரம்ப் தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது, பத்து ஆண்டுகள் நடைபெற்ற தேடுதல் வேட்டையைத் தொடர்ந்து மும்பை பயங்கரவாத தாக்குதலுக்கு மூலையாகச் செயல்பட்டவரை (ஹஃபீஸ் சையத்) பாகிஸ்தான் தற்போது கைது செய்துள்ளது.