சீனாவின் வூஹான் நகரில் தோன்றிய கோவிட்-19 (கொரோனா வைரஸ்) என்ற தொற்றுநோய் தற்போது அந்நாடு மட்டுமின்றி தென் கொரியா, ஈரான், இத்தாலி என பல்வேறு உலக நாடுகளிலும் பரவிவருகிறது.
இந்நிலையில், கோவிட்-19 பரவலை கருத்தில் கொண்டு அடுத்த மாதம் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஆசிய நாடுகளின் தலைவர்களுடன் நடைபெறவிருந்த மாநாட்டை அமெரிக்கா ஒத்திவைத்துள்ளது.
இதுதொடர்பாக அமெரிக்க மூத்த அலுவலர் ஒருவர் கூறுகையில், "கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த உலக நாடுகள் தீவிரமாகச் செயல்பட்டுவருகின்றன. இதனைக் கருத்தில் கொண்டு மார்ச் மாதம் நடைபெறவிருந்த ஆசியத் தலைவர்களுடனான மாநாட்டு ஒத்திவைக்க அரசு முடிவெடுத்துள்ளது" என்றார்.
கொரோனா வைரஸ் காரணமாக உலகளவில் இரண்டு ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இதில் பெரும்பாலானவை பாதிப்பின் மையப்புள்ளியான வூஹான் நகரில் நிகழ்ந்துள்ளது.
இதையும் படிங்க : கொடூர கொரோனா: நாளுக்கு நாள் அதிகரித்துவரும் உயிரிழப்பு எண்ணிக்கை