உலகம் முழுவதும் கரோனா தொற்றின் தாக்கம் கொஞ்சமும் குறையாத நிலையில், இந்தியா, அமெரிக்கா, பிரேசில் போன்ற நாடுகள் அதன் கோரப்பிடியில் சிக்கித் தவித்து வருகின்றன.
கரோனாவுக்கான தடுப்பூசியைக் கண்டுபிடிக்க உலக விஞ்ஞானிகள் தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே, கரோனாவுக்கான தடுப்பூசி அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் அல்லது இந்த ஆண்டு இறுதிக்குள் அமெரிக்காவில் அனைவருக்கும் இலவசமாகக் கிடைக்கும் வகையில் திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தடுப்பூசி விநியோகத்தில் சுணக்கம் ஏற்படும் என மக்கள் கருதுவதாகக் கருத்து பரவி வரும் நிலையில், அந்நாட்டின் சுகாதாரத்துறை நாடாளுமன்றத்தில் இந்த அறிக்கையை தாக்கல் செய்துள்ளது.