அமெரிக்காவில் கரோனா பெருந்தொற்றின் தாக்கம் காரணமாக யூஎஸ் ஓப்பன் டென்னிஸ் தொடர் இந்த ஆண்டு நடக்குமா என்ற சந்தேகம் உலக டென்னிஸ் ரசிகர்கள் மத்தியில் நிலவி வந்தது.
இந்நிலையில் இக்குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள நியூயார்க் ஆளுநர் ஆண்ட்ரூ கோமோ, "இந்த ஆண்டிற்கான யூஎஸ் ஓப்பன் டென்னிஸ் தொடர் நியூயார்க்கில் உள்ள குயின்ஸ் பகுதியில், வரும் ஆகஸ்ட் 31ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 13ஆம் தேதி வரை பார்வையாளர்கள் இன்றி நடைபெறும்.
அங்கு விளையாட வரும் டென்னிஸ் வீரர்கள், பணியில் ஈடுபடப்போகும் ஊழியர்கள், ஒருங்கிணைப்பாளர்களின் பாதுகாப்பை அமெரிக்க டென்னிஸ் கழகம் உறுதி செய்யும். கூடுதலாக, கை கழுவும் வசதி, லாக்கர் ரூம் வசதி, தங்கும் வசதி, போக்குவரத்து வசதிகள் அனைவருக்கும் செய்து தரப்படும்" என அறிவித்துள்ளார்.