வாஷிங்டன்: புவி வெப்பமயமாக்கலுக்கு எதிராக உள்ள பசுமை இல்ல வாயுக்கள் உள்ளிட்ட காரணிகளைக் கட்டுப்படுத்தும் நோக்கில் கடந்த 2016ஆம் ஆண்டு பாரிஸ் பருவநிலை மாற்ற உடன்படிக்கை உருவாக்கப்பட்டது.
பாரிஸ் உடன்படிக்கையிலிருந்து வெளியேறிய அமெரிக்கா - அமெரிக்க முன்னாள் அதிபர் பாராக் ஒபாமா
புவி வெப்பமயமாக்கலுக்கு எதிரான நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் பாரிஸ் உடன்படிக்கையிலிருந்து அமெரிக்கா நிரந்தரமாக வெளியேறியது.
சுமார் 72 நாடுகள் இணைந்து உருவாக்கிய இந்த உடன்படிக்கையிலிருந்து வெளியேறுவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கடந்த நவம்பர் மாதம் தெரிவித்திருந்தார். அமெரிக்க முன்னாள் அதிபர் பாராக் ஒபாமாவால் கையெழுத்திடப்பட்ட இந்த உடன்படிக்கை அமெரிக்காவிற்கு பெரும் பொருளாதார இழப்புகளைத் தரும் எனக் கூறியிருந்தார்.
இந்நிலையில், உடன்படிக்கையிலிருந்து வெளியேறுவது தொடர்பாக ஏதேனும் மாற்றுக் கருத்து ஏற்பட்டால் ஓராண்டுக்குள் அறிவிக்குமாறு ஐக்கிய நாடுகள் சபை கால அவகாசம் அளித்தது. ஆனால், உடன்படிக்கையிலிருந்து பின்வாங்குவதில் ட்ரம்ப் உறுதியாக இருந்ததால், தற்போது அமெரிக்கா பாரிஸ் உடன்படிக்கையிலிருந்து வெளியாவது உறுதியாகியுள்ளது.