தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

கறுப்பின பாதிரியார்களின் கால்களைக் கழுவிய அமெரிக்க காவலர்கள் - அமெரிக்கா கறுப்பினத்தவர் போராட்டம்

வாஷிங்டன்: ஜார்ஜ் ஃப்ளாய்டின் மறைவுக்கு தங்களது வருத்தத்தைப் பதிவுசெய்யும் விதமாக, அமெரிக்காவின் நார்த் கரோலினா பகுதி காவலர்கள் அங்குள்ள கறுப்பின பாதிரியார்களின் கால்களைக் கழுவியுள்ளனர்.

Pastor
Pastor

By

Published : Jun 9, 2020, 4:49 PM IST

அமெரிக்காவின் நார்த் கரோலினா மாகாணத்தில் நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனைக் கூட்டத்தில் அங்குள்ள கறுப்பின பாதிரியார்களின் கால்களைக் கழுவும் சடங்கு நடைபெற்றது. கிறிஸ்துவ மத வழக்கப்படி மனிதனின் பணிவைக் குறிக்கும் கால்களைக் கழுவுவது புனித நடவடிக்கையாகக் கருதப்படும்.

அமெரிக்காவில் ஜார்ஜ் ஃப்ளாய்ட் என்ற கறுப்பினத்தவர் அந்நாட்டின் காவலரால் படுகொலை செய்யப்பட்ட சம்பவம், நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ச்சியாக கறுப்பின மக்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கு இனியாவது முடிவு கட்டப்பட வேண்டும் என கோஷத்துடன் அங்கு பெரும் போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன.

இந்தச் சம்பவத்திற்குப் பெரும்பாலான வெள்ளையின மக்களும் தங்களின் வருத்தத்தைப் பதிவுசெய்து, போராட்டத்திற்கு ஆதரவளித்துவருகின்றனர். இதன் ஒரு பகுதியாக அங்குள்ள தேவாயத்தில் நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனைக் கூட்டத்தில், கறுப்பின பாதிரியாரின் கால்களைக் கழுவும் சடங்கில் ஈடுபட்டனர். அத்துடன் மக்கள் தங்கள் வேறுபாடுகளைக் கடந்து அன்பையும், சகோதரத்துவத்தையும் நிலைநிறுத்துவோம் என்று பிரார்த்தனையும் மேற்கொண்டனர்.

இதையும் படிங்க:ஐநா தலைமையகத்தை படிப்படியாகத் திறக்க திட்டம்!

ABOUT THE AUTHOR

...view details