சீனாவில் பரவத் தொடங்கிய கோவிட் 19 தொற்று, அந்நாட்டில் குறைந்திருந்தாலும் மற்ற நாடுகளில் வேகமாக பரவிவருகிறது. குறிப்பாக, அமரிக்காவில் இதன் தாக்கம் யாரும் எதிர்பார்க்காத வகையில் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் வெளியிட்ட தரவுகளின்படி, கடந்த 24 மணிநேரத்தில் அமெரிக்காவில் இத்தொற்றால் 1,830 பேர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த நான்கு நாள்களில் மட்டும் ஏறத்தாழ 8,000க்கும் மேற்பட்ட உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. இதனால், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20,577ஆக அதிகரித்துள்ளது.
இதன்மூலம், கோவிட் 19 தொற்றால் உலகளவில் அதிக இறப்புகள் ஏற்பட்ட நாடுகளில் முதலிடத்தில் இருந்த இத்தாலியை தற்போது அமெரிக்கா விஞ்சியுள்ளது.