தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

காஷ்மீரில் பிறந்த பெண்ணுக்கு ஜோ பைடனின் டிஜிட்டல் அணியில் முக்கிய பதவி - ஜோ பைடனின் டிஜிட்டல் அணியில் முக்கிய பொறுப்பை பெற்ற காஷ்மீரி பெண்

அமெரிக்க அதிபராக பதவியேற்கவுள்ள ஜே பைடனின் டிஜிட்டல் அணியில், காஷ்மீரில் பிறந்த ஆயிஷா ஷாவுக்கு முக்கிய பதவி வழங்கப்பட்டுள்ளது.

காஷ்மீரைச் சேர்ந்த ஆயிஷா ஷா
காஷ்மீரைச் சேர்ந்த ஆயிஷா ஷா

By

Published : Dec 31, 2020, 9:59 PM IST

ஜம்மு:காஷ்மீரில் பிறந்த ஆயிஷா ஷாவுக்கு அமெரிக்க அதிபராக பதவியேற்கவுள்ள ஜோ பைடனின் வெள்ளை மாளிகை டிஜிட்டல் வியூக அணியில் முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. தனது டிஜிட்டல் வியூக அணியின் உறுப்பினர்கள் குறித்து ஜோ பைடன் கடந்த திங்கட்கிழமை அன்று அறிவிப்பு வெளியிட்டார்.

அணியின் பார்ட்னர்ஷிப் மேலாளர் பொறுப்பு ஆயிஷா ஷாவுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஸ்ரீநகரில் பிறந்த ஆயிஷாவின் பெற்றோர் 90களில் காஷ்மீரிலிருந்து அமெரிக்காவின் லூசியானா மாகாணத்தில் குடியேறினார். தற்போது ஆயிஷா சுமித்சோனியன் நிறுவனத்தில் அட்வான்ஸ் ஸ்பெஷலிஸ்டாக பணியாற்றி வருகிறார். இதையடுத்து வெள்ளை மாளிகையில் ஆயிஷா இடம்பிடித்துள்ளதை அறிந்து காஷ்மீர் மக்கள் பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

நமது ஈடிவி பாரத்திடம் பேசிய காஷ்மீரில் இருக்கும் ஆயிஷாவின் அண்டை வீட்டில் வசித்த அல்லாஃப் பசாசஸ், "ஆயிஷா நன்கு கல்வி அறிவு கொண்ட குடும்பத்தைச் சேர்ந்தவர். கடின உழைப்பே வெற்றிக்கு வழிவகுக்கும் என்று அவரது இந்த முன்னேற்றத்தை எண்ணி நாங்கள் பெருமைக்கொள்கிறோம்.

அமெரிக்காவுக்கு குடியேறியபோது ஆயிஷாவுக்கு சிறு வயது. அவரது தந்தை சையத் அமீர் ஷா மருத்துவர். ஆண்டுதோறும் ஆயிஷா இங்கு வந்து சில நாட்கள் தங்கியிருந்து விடுமுறையை செலவிட்டு செல்வார். அவரது தந்தை அண்டை வீட்டாருக்கு உதவும் மனபான்மை கொண்டவர். ஆயிஷாவின் தாத்தா ஜம்மு காஷ்மீர் டிஐஜியாக இருந்தார். அவரை அன்புடன் நாங்கள் ஷாஜி, ஷாம்ஜி என அழைப்போம். அவர் மிகவும் பண்பானவர்.

ஷாஜியின் அக்கா, மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் செயலாளராக பணியாற்றியவர். ஆயிஷாவின் அத்தை அஸ்ரா ஷா இங்குள்ள கல்வி நிறுவனத்தில் துறை தலைவராக பணியாற்றி வந்தார். பணி ஓய்வு பெற்ற பின்பு அவரும் அமெரிக்கா சென்றுவிட்டார்.

அமெரிக்க வெள்ளை மாளிகையில், ஆயிஷா இடம்பெற்றுள்ளதால் காஷ்மீர் விவகாரம் விரைவில் தீர்க்கப்படும் என நம்புகிறோம். ஆயிஷா காஷ்மீரின் மகள். அவருக்கு, இங்குள்ள மக்கள் சந்தித்து வரும் இன்னல்கள், பிரச்னைகள் குறித்து தெரியும்" என்றார்.

இதையும் படிங்க:அமெரிக்காவில் 2 கோடியைத் தாண்டிய கரோனா; 3.50 லட்சத்தை தாண்டிய உயிரிழப்பு!

ABOUT THE AUTHOR

...view details