தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

'தற்போது மிகவும் கடினமான சூழ்நிலையில் உள்ளது' - அமெரிக்க தொற்று நோய் வல்லுநர் - கரோனா தடுப்புமருந்து

வாஷிங்டன்: அமெரிக்காவில் இதுவரை 2.4 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கரோனா காரணமாக உயிரிழந்துள்ள நிலையில், தேசம் மிகவும் கடினமான சூழ்நிலையில் இருப்பதாக அந்நாட்டின் தொற்று நோய் வல்லுநர் அந்தோணி ஃபவுசி தெரிவித்துள்ளார்.

Fauci
Fauci

By

Published : Nov 13, 2020, 5:36 PM IST

அமெரிக்காவில் கரோனா பரவலின் தாக்கம் தொடர்ந்து மோசமாகிவருகிறது. அதிபர் ட்ரம்ப் சரியாகச் செயல்பட தவறியதே நிலைமை மோசமாக உள்ளதாக அந்நாட்டின் தொற்று நோய் வல்லுநர் அந்தோணி ஃபவுசி கடுமையான விமர்சனங்களை முன்வைத்திருந்தார்.

இந்நிலையில், அதிபர் தேர்தல் பரப்புரையின்போது, அந்தோணி ஃபவுசியை விரைவில் டிஸ்மிஸ் செய்யப்போவதாக ட்ரம்ப் அறிவித்திருந்தார். இந்தச் சூழ்நிலையில், தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில் அமெரிக்கா தற்போது மிகவும் கடினமான சூழ்நிலையில் உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இது குறித்த அவர் மேலும் கூறுகையில், "நாடு தற்போது மிகவும் கடினமான சூழ்நிலையில் உள்ளது. நாம் அதிர்ஷ்டசாலிகள், ஏனென்றால் முதலில் செயல்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படும் கரோனா தடுப்பு மருந்தின் செயல்திறன் 90 முதல் 95 விழுக்காடு வரை உள்ளது. இரண்டாவது தடுப்பு மருந்தும் நல்ல முறையில் செயல்படுகிறது.

தற்போதுள்ள தொழில்நுட்பத்தாலேயே தடுப்பு மருந்தை நம்மால் இவ்வளவு விரைவாக உருவாக்க முடிந்தது. இதேநிலை 15-20 ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்டிருந்தால், தடுப்பு மருந்தை உருவாக்க குறைந்தது சில ஆண்டுகள் ஆகியிருக்கும்.

ஃபைஸர் நிறுவனத்தின் கரோனா தடுப்பு மருந்து டிசம்பர் மாதத்திலோ அல்லது அடுத்தாண்டு தொடக்கத்திலோ செயல்பாட்டுக்குவரும். ஏப்ரல், மே போன்ற மாதங்களில் சாதாரண மக்களுக்கும் அந்தத் தடுப்பு மருந்து கிடைக்கும் நிலை ஏற்படும்.

தொற்று நோய் வல்லுநர் அந்தோனி ஃபவுசி பேட்டி

இந்த இடைப்பட்ட காலத்தில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த மாஸ்க் அணிவதை கட்டாயமாக்க வேண்டும், பொது இடங்களில் தனிமனித இடைவெளியை முறையாகக் கடைப்பிடிக்க வேண்டும். கைகளை அடிக்கடி சோப்பு போட்டு கழுவ வேண்டும். இவை கேட்க எளிமையாக இருக்கலாம். ஆனால், மக்களை இதை பின்பற்ற வைப்பது கடினம். ஆனால், மக்கள் முறையாக இவற்றை பின்பற்றினால் பெரியளவில் மாற்றம் ஏற்படும்.

இது புது வகையான வைரஸ். இது குறித்த தகவல்களை இப்போதுதான் ஒவ்வொன்றாக நாம் கற்றுவருகிறோம். தற்போது உருவாக்கப்பட்டுள்ள தடுப்பு மருந்துகளும்கூட எவ்வளவு காலம் வைரசில் இருந்து மக்களை பாதுகாக்கும் என்பது நமக்கு உறுதியாக தெரியாது" என்றார்.

அமெரிக்காவில் தற்போது வரை ஒரு கோடிக்கும் அதிகமானோருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் 13 லட்சத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

இதையும் படிங்க: ஆஸ்திரேலியாவின் கரோனா தடுப்பு மருந்து - தற்போது நிலை என்ன?

ABOUT THE AUTHOR

...view details