தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

பாகுபாடின்றி அனைத்து மக்களுக்குமான அதிபராக செயல்படுவேன் - பைடன் உறுதி! - அமெரிக்க அதிபர் தேர்தல்

வாஷிங்டன்: தனக்கு வாக்களித்திருந்தாலும் இல்லாவிட்டாலும் பாகுபாடின்றி அனைத்து மக்களுக்கான அதிபராக செயல்படுவேன் என அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றிபெற்றுள்ள ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

பைடன்
பைடன்

By

Published : Nov 8, 2020, 1:23 AM IST

அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் 3ஆம் தேதி நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கையானது கடந்த மூன்று நாள்களாக நடைபெற்ற நிலையில், தொடக்கத்தில் குடியரசு கட்சி வேட்பாளரும் தற்போதைய அதிபரான ட்ரம்ப் பெரும்பான்மையான மாகாணங்களில் வெற்றிபெற்றிருந்தார். ஆனால், ஜனநாயக கட்சி வேட்பாளர் பைடன் கடும் சவால் அளித்துவந்தார். ஒரு கட்டத்தில் முக்கிய மாகாணங்களில் ஜனநாயக கட்சி வெற்றிபெற தொடங்கியது.

இழுபறி மாகாணங்களான பென்சில்வேனியா, மிச்சிகன் உள்ளிட்டவற்றில் பைடன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட நிலையில், அமெரிக்காவின் 46ஆவது அதிபராக ஜோ பைடன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், பாகுபாடின்றி அனைத்து மக்களுக்குமான அதிபராக செயல்படுவேன் என பைடன் உறுதி அளித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "நம் சிறப்பான நாட்டை ஆள என்னை தேர்ந்தெடுத்திருப்பது பெருமையாக உள்ளது. நமக்கான எதிர்கால பணி மிகவும் கடினமானது. ஆனால், நான் உங்களுக்கு ஒரு உறுதிமொழியை அளிக்கிறேன்.

நீங்கள் எனக்கு வாக்களித்திருந்தாலும் இல்லாவிட்டாலும் பாகுபாடின்றி அனைத்து அமெரிக்கர்களுக்கான அதிபராக செயல்படுவேன். நீங்கள் என் மீது வைத்த நம்பிக்கைக்கு ஏற்ப செயல்படுவேன்" என பதிவிட்டுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details