பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்தில் இருந்து வந்த ஹாங்காங் 1997ஆம் ஆண்டு சீனாவின் கட்டுப்பாட்டுக்கு வந்தது. அதே வேளையில், சிறப்பு அந்தஸ்து பெற்ற தன்னாட்சி பிராந்தியமாக 50 ஆண்டுகள் ஹாங்காங் செயல்படும் வகையில் சீனா சட்டம் இயற்றியது.
இந்நிலையில், கடந்த ஜூன் மாதத்திலிருந்து ஹாங்காங் மக்கள் தீவிரப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஹாங்காங் அரசின் சர்ச்சைக்குரிய கைதிகள் பறிமாற்ற மசோதாவை எதிர்த்து இப்போராட்டமானது தொடங்கப்பட்டது. காவல்துறையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் மோதல் தீவிரமடையவே அங்குச் சீனா தனது ராணுவத்தை அனுப்பியது. போராட்டக்காரர்களை ஒடுக்குவதில் சீனா காட்டிவரும் தீவிரத்தை உலக நாடுகள் தீவிரமாக நோக்கி வருகின்றன.
ஜனநாயகத்திற்கு எதிராகவும் மனித உரிமைகளைப் பறிக்கும் வகையிலும் சீனாவின் செயல்பாடுகள் இருப்பதாக உலக அரங்கில் கண்டனக் குரல்கள் எழுப்பப்பட்டன.