அமெரிக்கா - சீனா நாடுகளுக்கிடையே மேற்கொள்ளப்பட்டிருக்கும் வர்த்தக உடன்படிக்கை நம்பிக்கை அளிக்கும் வகையில் உள்ளதாக உலக வர்த்தக மையம் லாஸ் ஏஞ்சல்ஸின் (WTCLA) தலைவர் ஸ்டீபன் சியுங் தெரிவித்துள்ளார். கடந்த ஒரு வருடமாக அதிகரிக்கப்பட்ட வரியால், பெரிதும் பாதிக்கப்பட்டது லாஸ் ஏஞ்சல்ஸ்தான் என்றும் அவர் கூறினார்.
இதுகுறித்து அவர், "கடந்த 12 மாதமாக லாஸ் ஏஞ்சல்ஸிலுள்ள துறைமுகங்களில் ஏற்றுமதி குறைந்துள்ளது. கடந்த ஆண்டு நவம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் இறக்குமதியும் 12 சதவிகிதம் வரை குறைந்துள்ளது.
இங்குள்ள போர்ட் ஆஃப் லாங் பீச் துறைமுகத்தில் கையாளப்படும் சரக்குகளும் 5 சதவிகிதம் வரை குறைந்துள்ளது. இதன் காரணமாக மூலப் பொருள்களின் விலையும் சந்தையில் விற்கப்படும் பொருள்களின் விலையும் அதிகரித்துள்ளது. குறைவான சரக்கு கப்பல்கள் இங்கு வருவது, குறைவான வேலைவாய்ப்பையே ஏற்படுத்துகிறது.