தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

பிரேசிலுக்குச் சென்ற 2 மில்லியன் டோஸ் மருந்து!

லத்தீன் அமெரிக்க நாடுகளில் அதிகமாக கரோனா தொற்று பாதித்துவரும், பிரேசிலுக்கு இரண்டு மில்லியன் டோஸ் மருந்தை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அனுப்பியுள்ளார்.

coronavirus Latin America COVID-19 tracker Donald Trump லத்தின் அமெரிக்கா பிரேசில் அமெரிக்கா டிரம்ப்
பிரேசிலுக்கு சென்ற இரண்டு மில்லியன் டோஸ் மருந்து

By

Published : Jun 1, 2020, 2:53 PM IST

உலகளவில் கரோனா தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை 62,62,422ஆக உயர்ந்துள்ளது. இத்தொற்றால் 3.73 லட்சம் மக்கள் உயிரிழந்துள்ளனர்.

கடந்த 24 மணிநேரத்தில் பிரேசிலில் 16,409 பேருக்கு கோவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் அந்நாட்டில் கோவிட்-19 தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை 5,14,849ஆக உயர்ந்துள்ளது.

தொற்று பாதித்தோரின் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க மலேரியாவை குணப்படுத்தக்கூடிய மருந்தை அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், பிரேசிலுக்கு அனுப்பியுள்ளார். அவ்வாறு அனுப்பிய மருந்தின் அளவு இரண்டு மில்லியன் டோஸ் என்று கூறப்படுகிறது.

லத்தீன் அமெரிக்க நாடுகளில் கோவிட்-19 தொற்று அதிகமாக பாதித்தது, பிரேசிலில்தான். கடந்த வாரம் வைரஸ் பரவலைக்கட்டுப்படுத்த லத்தீன் அமெரிக்க நாடுகளுக்கு இடையேயான பயணத்தைத் தடை செய்து அமெரிக்க அதிபர் அறிவித்திருந்தார்.

புதியதாக கரோனா தொற்று ஏற்பட்டவர்களுக்கு லேசான, மிதமான அறிகுறிகள் தென்படுகின்றன. வயது ஆனோர்கள் அல்லது உடல்நலக்குறைவு உள்ளவர்கள் இந்தத்தொற்றால் அதிகம் உயிரிழக்கின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details