சாண்டியாகோ:கரோனா தொற்று பாதிக்கப்பட்ட லத்தீன் அமெரிக்கா, கரீபியன் பகுதிகளில் 20 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வறுமையில் தள்ளப்பட்டுள்ளதாக ஐநாவின் பொருளாதார நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
வறுமையினால் பாதிக்கப்பட்ட மக்கள்தொகை 30.5 விழுக்காட்டிலிருந்து 33.7 விழுக்காடாக உயர்ந்துள்ளது எனவும் அந்த பிராந்தியத்தில் 12.5 விழுக்காடு மக்களுக்கு அடிப்படை உணவுகூட கிடைக்கவில்லை எனவும் எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. வறுமையால் பாதிக்கப்பட்டோரின் விழுக்காடு கடந்த 20ஆண்டுகளில் இல்லாத வகையில் உயர்ந்துள்ளது.