தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

'உலகப் போர்களின்போது சந்தித்ததைவிட மோசமான நெருக்கடியை உலகம் சந்திக்கும்' - கோவிட் 19

நியூயார்க்: கோவிட்-19 வைரஸ் தொற்றால் சர்வதேச அளவில் உலகப் போருக்குப் பின் சந்தித்த பொருளாதார மந்தநிலையைவிட மிக மோசமான ஒரு நெருக்கடியை உலக நாடுகள் சந்திக்கும் என்று ஐநா பொதுச்செயலாளர் தெரிவித்துள்ளார்.

UN chief
UN chief

By

Published : Apr 1, 2020, 2:10 PM IST

கோவிட்-19 வைரஸ் தொற்று தற்போது 200-க்கும் மேற்பட்ட நாடுகளில் கடுமையாகப் பாதித்துள்ளது. இதனால் சர்வதேச பொருளாதாரமும் பெரிய சரிவை சந்தித்துள்ளது. சர்வதேச நாணய நிதியம் 2009ஆம் ஆண்டு ஏற்பட்ட மந்தநிலையைவிட கரோனா பாதிப்பு பெரும் மந்தநிலையை உருவாக்கும் என்று அச்சம் தெரிவித்தது.

இந்நிலையில் காணொலி கலந்தாய்வு மூலம் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய ஐநா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ், "உலகப் போர்களுக்குப் பின் மிக மோசமான ஒரு நெருக்கடி நிலையை வரும் காலங்களில் உலக நாடுகள் சந்திக்கவுள்ளன. இது உலகிலுள்ள அனைவருக்கும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் ஏற்படும் பொருளாதார இழப்புகளும் சமீப காலங்களில் நாம் கண்டிராத வகையில் மிக மோசமானதாக இருக்கும். இதனால் ஏற்படும் பொருளாதார பாதிப்புகளிலிருந்து மீள உலக நாடுகள் அனைத்தும் ஒற்றுமையாக இருக்க வேண்டியது அவசியம். வரப்போகும் பொருளாதார மந்தநிலையை நாம் எப்படிச் சமாளிக்கவுள்ளோம் என்பதே பெரும் சவலாக இருக்கப்போகிறது.

நாம் இப்போது சரியான பாதையிலேயே பயணித்துவருகிறோம். இருப்பினும் நமது வேகத்தை நாம் அதிகரிக்க வேண்டும். அதேபோல இப்போது அரசியல் விளையாட்டுகளை எல்லாம் தள்ளிவைத்துவிட்டு மக்களுக்காக உழைக்க வேண்டும்" என்றார்.

இதையும் படிங்க: புடினுக்கு கைகொடுத்த மருத்துவருக்கு கரோனா: அதிர்ச்சியில் ரஷ்யா!

ABOUT THE AUTHOR

...view details