அதிபர் ட்ரம்ப்பின் இந்தியப் பயணம் தொடர்பாக அமெரிக்க மூத்த அலுவலர் ஒருவர் தொலைபேசி மூலம் செய்தியாளர்களிடம் பேட்டியளித்தார்.
அப்போது, குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவை குறித்து மோடியிடம் ட்ரம்ப் பேசுவாரா என்ற செய்தியாளர்களின் கேள்விக்குப் பதிலளித்த அவர், " (பிரதமர் நரேந்திர மோடியுடனான சந்திப்பின்போது) அதிபர் ட்ரம்ப் இருநாடுகளின் ஜனநாயகப் பாரம்பரியம், மதச் சுதந்திரம் பற்றி பேசுவார். குறிப்பாக, மதச் சுதந்திரம் குறித்து அவர் ஆலோசிப்பார்.
இந்தியாவின் ஜனநாயகப் பாரம்பரியம், அமைப்புகள் மீது நாங்கள் பெருமதிப்புக் கொண்டுள்ளோம். இந்தப் பாரம்பரியத்தை எப்போதும் பேணி காக்க இந்தியாவை ஊக்குவிப்போம்.