தமிழ்நாடு

tamil nadu

By

Published : Dec 14, 2020, 2:20 PM IST

ETV Bharat / international

தடுப்பூசியை இப்போதைக்கு எடுத்துக் கொள்ளப்போவதில்லை - ட்ரம்ப்

வாஷிங்டன்: கரோனா தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாக அதனை எடுத்துக்கொள்ளப்போவதில்லை என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

தடுப்பூசி
தடுப்பூசி

ஃபைசர் நிறுவனம் தயாரித்துள்ள கரோனா தடுப்பூசிக்கு அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் அவசரகாலப் பயன்பாட்டிற்கான அனுமதி அளித்திருந்தது. அதன்படி, மக்களுக்கு கரோனா தடுப்பூசி போடுதல் இன்று முதல் தொடங்கப்படவுள்ளது. இந்நிலையில், தானோ வெள்ளை மாளிகை ஊழியர்களோ முதற்கட்டமாக தடுப்பூசி போட்டு கொள்ளப்போவதில்லை என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

ஆனால், அதிபரிடம் நெருங்கி பணியாற்றியவர்களுக்கு முன்னுரிமை வழங்கி கரோனா தடுப்பூசி போட திட்டமிடப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை அலுவலர் ஒருவர் தெரிவித்துள்ளார். இது குறித்து ட்ரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில், "அவசியம் ஏற்படாத வரை, வெள்ளை மாளிகை ஊழியர்களுக்கு இப்போதைக்கு கரோனா தடுப்பூசி போடப்படாது. இந்த மாற்றத்தை மட்டும் மேற்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளேன்.

திட்டமிட்டபடி நான் இப்போதைக்கு கரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளமாட்டேன். ஆனால், சரியான நேரத்தில் போட்டுக் கொள்வேன்" எனப் பதிவிட்டுள்ளார். முன்னதாக, தடுப்பூசிகள் அந்தந்த மாநிலங்களுக்கு அனுப்பட்டுள்ளது. ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாகவே தடுப்பூசிகளை தயாரித்துவிட்டோம் என ட்ரம்ப் தெரிவித்திருந்தார்.

இது குறித்து தேசிய பாதுகாப்பு கவுன்சில் செய்தித்தொடர்பாளர் ஜான் உலியோட் கூறுகையில், "அரசு வழிகாட்டுதலின்படி நிர்வாகம், சட்டம், நீதி ஆகிய மூன்று துறைகளின் மூத்த அலுவலர்களுக்கு கரோனா தடுப்பூசி போடப்படும். பொது சுகாதாரத் துறை நிபுணர்களின் ஆலோசனைப்படி மூத்த அலுவலர்களுக்கு வழங்கப்படும் அதே தடுப்பூசிதான் மக்களுக்கு வழங்கப்படுகிறது என நம்பிக்கை அமெரிக்கர்களுக்கு இருக்க வேண்டும்" என்றார்.

ABOUT THE AUTHOR

...view details