கடந்தாண்டு இறுதியில் சீனாவில் கண்டறியப்பட்ட கோவிட்-19 தொற்று அந்நாட்டில் கட்டுக்குள் வந்துவிட்டது. இருப்பினும் உலக வல்லரசு நாடான அமெரிக்கா இந்த தீநுண்மி தொற்றால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. தொற்று பரவலைக் கட்டுப்படுத்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எடுத்துவரும் நடவடிக்கைகள் பெரும் விமர்சனத்திற்குள்ளாகியுள்ளன.
இந்நிலையில், வெள்ளை மாளிகையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அமெரிக்க அதிபர் ட்ரம்பிடம் வியட்நாம் போரில் அமெரிக்க இழந்த வீரர்களைவிட கடந்த ஆறு வாரத்தில் கோவிட்-19 தொற்றால் அதிக அமெரிக்கர்களை இழந்துள்ளோம், எனவே நடைபெறவிருக்கும் அதிபர் தேர்தலில் மீண்டும் அதிபராக நீங்கள் தகுதியானவரா என்று கேள்வி எழுப்பப்பட்டது.
வியட்நாம் போரில் சுமார் 58 ஆயிரம் அமெரிக்க வீரர்கள் உயிரிழந்தனர். கடந்த ஆறு வாரங்களில் கோவிட்-19 தொற்றால் மட்டும் 56 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அமெரிக்கர்கள் உயிரிழந்துள்ளனர். இந்த எண்ணிக்கை வரும் காலங்களில் அதிகரிக்கக்கூடும் என்றும் அஞ்சப்படுகிறது.
செய்தியாளர்களின் கேள்விக்குப் பதிலளித்த ட்ரம்ப், "கோவிட்-19 தொற்றால் அமெரிக்காவில் சுமார் 22 லட்சம் பேர் உயிரிழப்பார்கள் என்று தொடக்கத்தில் கணிக்கப்பட்டது. ஆனால் இப்போது உயிரிழப்புகள் 60 ஆயிரத்திலிருந்து 70 ஆயிரம் வரை இருக்கும் என்றே கருதுகிறேன்.