தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

சவுதி அரேபியாவுக்கு ஆயுதம் விற்க ட்ரம்ப் முடிவு - saudi arabia

வாஷிங்டன்: ஈரான்-அமெரிக்கா மோதல் உச்சத்தை அடைந்துள்ள நிலையில், அமெரிக்க நாடாளுமன்றத்தின் ஒப்பந்தலின்றி சவுதி அரேபியாவுக்கு பலகோடி ரூபாய் மதிப்புள்ள ஆயுதங்களை விற்பனை செய்ய அதிபர் ட்ரம்ப் முடிவுசெய்துள்ளார்.

TRUMP

By

Published : May 25, 2019, 5:30 PM IST


ஈரான் அணுசக்தி ஒப்பந்த விவகாரத்தில், அமெரிக்கா-ஈரான் இடையேயான மோதல் உச்சத்தை அடைந்துள்ளது. இதன் காரணமாக, பாரசீக வளைகுடாவில் பல்வேறு ராணுவ கப்பல்களையும், போர் விமானங்களையும் வாங்கி அமெரிக்கா குவித்து வருகிறது.

இந்நிலையில், ஈரானின் அண்டை நாடுகளில் ஒன்றான சவுதி அரேபியாவுக்கு எட்டு பில்லியன் டாலர் ( இந்திய மதிப்பில் ரூ. 555 ஆயிரம் கோடி) மதிப்பிலான ஆயுதங்களை விற்பனை செய்ய அமெரிக்க அதிபர் ட்ரம்ப் முடிவெடுத்துள்ளார். அமெரிக்க நாடாளுமன்ற ஒப்பந்தலின்றி இந்த விற்பனையை மேற்கொள்ள அந்நாட்டில் அவசரநிலை பிரகடனப்டுத்தியுள்ளார் அதிபர் ட்ரம்ப். இந்த முடிவானது, ட்ரம்பின் எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சியினரிடையே பெரும் கண்டனத்தை எழுப்பியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details