மெக்ஸிகோவிலிருந்து சட்ட விரோதமாக அமெரிக்காவுக்கு குடியேறுவதை தடுக்க அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தடுப்புச் சுவர் கட்ட வேண்டும் என பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார். இதனை தனது தேர்தல் வாக்குக்குறுதியாகவும் அவர் அறிவித்திருந்தார். மேலும், இதற்கான கட்டுமான பணிகளை மேற்கொள்ள அமெரிக்காவின் ராணுவ தலைமையகமான "பென்டகன்" ஒரு பில்லியன் நிதியை ஒதுக்கியது. இதனையடுத்து தடுப்புச் சுவர் கட்டுவதற்கான ஆயத்த பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மெக்ஸிகோ உடனான எல்லை மூடப்படும் - ட்ரம்ப் எச்சரிக்கை! - mexico
வாஷிங்டன்: மெக்ஸிகோ உடனான எல்லையை மூட உள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் எச்சிரிக்கை விடுத்துள்ளார்.
டொனால்ட் ட்ரம்ப்
இந்நிலையில், இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ட்ரம்ப், "சட்டவிரோதமாக அமெரிக்காவுக்குள் நுழைபவர்களை மெக்ஸிகோ தடுக்கவில்லை என்றால் அந்நாட்டிற்கு அருகே உள்ள தெற்கு எல்லை மூடப்படும்" என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பின்னர், புளோரிடாவில் இந்த விவகாரம் தொடர்பாக பேசிய ட்ரம்ப், "பலவீனமான மற்றும் பரிதாபமான சட்டங்களை நாங்கள் வைத்துள்ளோம். எங்களால் மக்களை தங்க வைக்க முடியவில்லை. இதனை மெக்ஸிகோ எளிதாக மேற்கொள்ள முடியும்" எனத் தெரிவித்தார்.