மெக்ஸிகோவில் இருந்து அமெரிக்காவுக்குள் சட்டவிரேதமாக குடியேறுபவர்களால், அதிகளவிலான போதை பொருட்கள் அமெரிக்காவுக்குள் ஊடுறுவுவதாக ட்ரம்ப் அரசாங்கம் கூறிவருகிறது.
‘மெக்ஸிகோ - அமெரிக்கா எல்லை முழுமையாக மூடப்படும்’ - ட்ரம்ப் எச்சரிக்கை!
வாஷிங்டன்: மெக்ஸிகோவிலிருந்து சட்டவிரோதமாக அமெரிக்காவுக்குள் குடியேறுவதை தடுக்க மெக்ஸிகோ நடவடிக்கை எடுக்காவிட்டால், இரு நாடுகளின் எல்லைப்பகுதி முழுமையாக மூடுப்படும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.
இதனால், மெக்ஸிகோ நாட்டிற்கு தொடர்ந்து ட்ரம்ப் அரசாங்கம் அழுத்தம் கொடுத்து வருகிறது. இதற்கிடையே மெக்ஸிகோ அதிபர், மெனுவல் லோபஸ் தங்கள் அரசாங்கத்தால் என்ன நடவடிக்கை எடுக்க முடியுமோ அதை எடுத்துவருவதாகவும், எந்த வகையிலும் அமெரிக்க அரசுக்கு இடையூறாக இருக்க விரும்பவில்லை என்றும் தெரிவித்தார்.
இந்நிலையில், மெக்ஸிகோவின் நடவடிக்கைகளில் அதிருப்தி அடைந்த ட்ரம்ப், மெக்ஸிகோவிலிருந்து சட்டவிரோதமாக அமெரிக்காவுக்குள் குடியேறுவதை தடுக்கமெக்ஸிகோநடவடிக்கை எடுக்காவிட்டால்,இரு நாடுகளுக்கும் இடையே உள்ள எல்லைப்பகுதி முழுமையாக மூடுப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.