அமெரிக்காவில் அதிபரின் பதவிக்காலம் நான்காண்டுகள் ஆகும். அதன்படி, 2016ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிட்ட டொனால்ட் ட்ரம்ப், ஜனநாயக கட்சியின் வேட்பாளர் ஹிலாரி கிளிண்டனை வீழ்த்தி அமெரிக்காவின் 45ஆவது அதிபராக பதவியேற்றுக்கொண்டார்.
அதிபர் தேர்தல் பரப்புரையை தொடங்கினார் ட்ரம்ப்! - டிரம்ப்
வாஷிங்டன்: அமெரிக்காவில் அதிபர் தேர்தல் 2020ஆம் ஆண்டு நடைபெற உள்ளதால், அதற்கான பரப்புரை வேலைகளை அதிபர் ட்ரம்ப் இன்று தொடங்கினார்.
trump
சமீபத்தில், இரண்டாவது முறையாக தான் அதிபர் தேர்தலில் போட்டியிட இருப்பதாகவும் அவர் அறிவித்திருந்தார்.
இந்நிலையில், அடுத்த ஆண்டு நடைபெறும் அதிபர் தேர்தலுக்கான பரப்புரையை டொனால்ட் ட்ரம்ப் இன்று முறைப்படி தொடங்கினார். புளோரிடா மாகாணத்தில் உள்ள ஒர்லண்டோவில் ட்ரம்ப் பரப்புரையை தொடங்கினார். 2020 நவம்பர் மூன்றாம் தேதி அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடக்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Last Updated : Jun 19, 2019, 4:26 PM IST