கரோனா பாதிப்பு விவகாரம் தொடர்பாக அமெரிக்க அதிபர் டொனல்ட் ட்ரம்ப் உலக சுகாதார அமைப்பைத் தொடர்ச்சியாக விமர்சித்துவருகிறார். அந்த அமைப்பிற்கு அதிகப்படியான நிதியை அமெரிக்காதான் வழங்கிவருகிறது.
ஆனால், அந்த அமைப்பு கரோனா விவகாரத்தில் சீனாவின் கைப்பாவையாக நடந்துகொள்வதாகப் பகிரங்கமாகக் குற்றச்சாட்டை முன்வைத்து அந்த அமைப்பிற்கு வழங்கும் நிதியை நிறுத்திவைத்தார்.
இந்நிலையில், நேற்றைய செய்தியாளர் சந்திப்பின்போது பேசிய அதிபர் ட்ரம்ப், "உலக சுகாதார அமைப்புடன் உள்ள அனைத்து உறவுகளையும் அமெரிக்கா துண்டித்துக் கொள்கிறது. அந்த அமைப்பிற்கு வழங்கப்பட்டுவந்த உதவி, ஒத்துழைப்பை சிறப்பாகச் செயல்படும் மற்ற சர்வதேச அமைப்புகளுக்கு வழங்கப்படும்" எனத் தெரிவித்தார்.