தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

'ஈரான் மிகப்பெரிய தவறை இழைத்துவிட்டது!' - கொந்தளித்த டிரம்ப்! - Iran

வாஷிங்டன்: அமெரிக்க ராணுவத்திற்குச் சொந்தமான ஆளில்லா விமானத்தை ஈரான் சுட்டு வீழ்த்தியதின் மூலம், அந்நாடு மிகப்பெரிய தவறை இழைத்துவிட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கடுமையாக சாடியுள்ளார்.

ட்ரம்ப்

By

Published : Jun 21, 2019, 10:39 AM IST

ஈரானின் அணுசக்தி ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா விலகுவதாக அதிபராகப் பொறுப்பேற்ற பின் ட்ரம்ப் தெரிவித்திருந்தார். இதைத்தொடர்ந்து, அந்நாடு மீது பல்வேறு தடைகளையும் அதிபர் ட்ரம்ப் அறிவித்தார். எனினும், விதிமுறைகள் எதையும் பின்பற்றாமல் ஒப்பந்தத்தில் ஈரான் இருந்துவருகிறது.

இந்நிலையில், ஈரான் அதிபர் ஹசன் ரவ்ஹானி, டொனால்ட் ட்ரம்ப் ஆகியோரிடையே வார்த்தைப்போர் மூண்டது. இந்த இரு நாடுகளுக்கிடையே நிலவும் இந்தப் பதற்றம், உலகளவில் மிகப்பெரிய தாக்கத்தையும் ஏற்படுத்தியது. வார்த்தைப்போர் இருப்பதை ஈரான் முற்றிலும் மறுத்தது.

ட்ரம்ப், ஈரான் அதிபர்
இதற்கிடையே, சமீபத்தில் வளைகுடா பகுதியில் எண்ணெய் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தியது ஈரான் என்று அமெரிக்கா குற்றம்சாட்டியது. இந்த மோதல் போக்கு முடிவதற்குள், அமெரிக்கா தனது உளவு வேலைக்குப் பயன்படுத்தும் ராணுவத்தின் ஆளில்லா விமானமான 'நார்த்ரொப் குர்மேன் ஆர்குயூ-4 குளோபல் ஹாக்' (Northrop Gruman RQ-4 Global Hawak) ஈரானின் புரட்சிகர ராணுவப் படை சுட்டு வீழ்த்தியது. முன்னதாக, இந்தத் தாக்குதலை அமெரிக்கா மறுத்தது.
2014 ஆம் ஆண்டு - 'நார்த்ரொப் குர்மேன் ஆர்குயூ-4 குளோபல் ஹாக்

இது தொடர்பாக, ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜாவத் ஜாரீப் தனது ட்விட்டர் பக்கத்தில், "எங்கள் எல்லையில் பறந்த அமெரிக்காவின் ஆளில்லா விமானம் உள்ளூர் நேரப்படி அதிகாலை 4.05 மணிக்குச் சுட்டு வீழ்த்தப்பட்டது. நாங்கள் போர் நடத்த விரும்பவில்லை. அதே சமயம், எங்கள் வானம், நிலம், நீர்நிலைகள் ஆகியவற்றைப் பாதுகாப்போம். இதனை ஐ.நா.வில் முறையிட உள்ளோம்" எனப் பதிவிட்டிருந்தார்.

ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜாவத் ஜாரீபின் ட்விட்
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய ட்ரம்ப், ஈரான் மிகப்பெரிய தவறை இழைத்துவிட்டதாகவும் இதனை அமெரிக்கா ஒரு போதும் பொறுத்துக் கொள்ளாது என்றும் கூறினார். இதற்கு அமெரிக்கா பதிலடி தருமா என்ற கேள்வியை எதிர்கொண்ட ட்ரம்ப், "விரைவில் பார்ப்பீர்கள்" என்று தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details