தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

'மலேரியாவுக்கான மருந்தை எடுத்து வருகிறேன்' - ட்ரம்ப்

வாஷிங்டன் : கரோனா வைரஸிடமிருந்து தன்னை தற்காத்துக் கொள்ள மலேரியா நோயைக் குணப்படுத்த உதவிய ஹைட்ராக்சி குளோரோகுயின் மருந்தை, தான் உட்கொண்டு வருவதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

trump takes malaria drug
trump takes malaria drug

By

Published : May 20, 2020, 12:52 AM IST

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க அதிபர் ட்ரம்ப், "கரோனா வைரஸிடமிருந்து தன்னை தற்காத்துக் கொள்ள ஹைட்ராக்கி குளோரோகுயின் மற்றும் ஸிங்க் மாத்திரைகளைக் கடந்த ஒன்றரை வாரங்களாக உட்கொண்டு வருகிறேன்.

இதனை எடுத்துக்கொள்ளுமாறு எந்த மருத்துவரும் எனக்கு அறிவுறுத்தவில்லை. எனினும், எனக்கு மருந்தினை வழங்குமாறு வெள்ளை மாளிகை மருத்துவரை கேட்டுக்கொண்டேன்.

இதுவரை, எனக்கு எந்த பக்க விளைவுகளும் ஏற்படவில்லை. நான் நன்றாகவே இருக்கிறேன்" எனத் தெரிவித்தார்.

ஹைட்ராக்சிகுளோரோகுயினை மருத்துவமனை அல்லது ஆய்வுக்கூடங்களுக்கு வெளியே பயன்படுத்த வேண்டாம் என்றும், அப்படிப் பயன்படுத்தினால் பக்க விளைவுகள் அல்லது உயிரிழப்பு கூட ஏற்படலாம் எனவும் அந்நாட்டின் உணவு மற்றும் மருந்துக் கட்டுப்பாடு ஆணைய மருத்துவ நிபுணர்களை அறிவுறுத்தியுள்ள சூழலில், அதிபர் ட்ரம்ப் இவ்வாறு கூறியுள்ளார்.

முன்னதாக, கோவிட்-19 நோயைக் குணப்படுத்த ஹைட்ராக்சி குளோகுயின் அல்லது புரோஃபைலாக்சிகஸ் மாத்திரைகள் பயன்படுத்துமாறு அதிபர் ட்ரம்ப் பல வாரங்களாக வலியுறுத்தி வந்தார்.

இதனிடையே, கடந்த மாதம் இந்த மருந்தை அமெரிக்காவுக்கு விநியோகிக்குமாறு இந்தியாவுக்கு மிரட்டும் தொனியில் வலியுறுத்தியது சர்ச்சைக்கு வழிவகுத்தது.

இதையும் படிங்க : மே 31 வரை சென்னை அம்மா உணவகங்களில் 3 வேளை உணவு இலவசம்!

ABOUT THE AUTHOR

...view details