தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

விரைவில் விசா கட்டுப்பாடு அமல்படுத்தப்படும் - ட்ரம்ப்! - அமெரிக்காவில் குடியேற்றம் சட்டம்

வாஷிங்டன்: அமெரிக்காவில் குடியேறும் நபர்களுக்கான விசா வழங்கும் முறையில் புதியக் கட்டுப்பாடுகள் விரைவில் அமல்படுத்தப்படும் என, அந்நாட்டு அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

Trump promises 'strong' immigration act soon
Trump promises 'strong' immigration act soon

By

Published : Jul 15, 2020, 10:28 PM IST

கரோனா பெருந்தொற்றால் அமெரிக்காவில் பெருமளவில் அதிகரித்துவரும் வேலை இழப்பைக் கருத்தில் கொண்டு, அயல்நாட்டவருக்குப் பணிபுரிய வழங்கப்படும் அனுமதியை (விசா) நிறுத்திவைத்து அமெரிக்க அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.

இது இந்தியாவில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள நிலையில், எடுக்கப்பட்டுள்ள இந்த நடவடிக்கை எதிர்பார்த்தபடியே பெருத்த விவாதத்திற்கு உள்ளகியுள்ளது.

இந்நிலையில் இன்று (ஜூலை 15) வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அமெரிக்க அதிபர் ட்ரம்ப், "அமெரிக்காவில் குடியேறும் நபர்களுக்கான விசா வழங்கும் முறையில் புதிய கட்டுப்பாடுகள் விரைவில் அமல்படுத்தப்படும். தகுதி அடிப்படையின் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும் குழந்தைகளுக்கென விசா வழங்குவதிலும் புதிய நடைமுறை கடைப்பிடிக்கப்படும்" என தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details