தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

சோமாலியாவிலிருந்து படைகளை வெளியேற்ற ட்ரம்ப் உத்தரவு! - பயங்கரவாத குழு

அமெரிக்கப் படைகளை சோமாலியாவை விட்டு வெளியேறுமாறு அதிபர் டொனால்ட் ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார். அந்நாட்டின் பாதுகாப்புச் செயலரான கிறிஸ்டோபர் மில்லர் கடந்த வாரம் சோமாலியாவுக்குச் சென்று அமெரிக்கத் துருப்புக்களைச் சந்தித்து வந்தார்.

டிரம்ப்
டிரம்ப்

By

Published : Dec 5, 2020, 1:19 PM IST

வாஷிங்டன்: அதிபர் டொனால்ட் ட்ரம்பின் உத்தரவின்பேரில் சோமாலியாவிலிருந்து அமெரிக்கப் படைகளை வெளியேற்றுவதாக பென்டகன் தெரிவித்துள்ளது.

அதிபர் தேர்தலில் ஏற்பட்ட தோல்வியை அடுத்து வெளிநாடுகளில் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளில் அமெரிக்காவின் ஈடுபாட்டைக் குறைக்க ட்ரம்ப் முடிவுசெய்துள்ளதாகத் தெரிகிறது.

இது தொடர்பாக பென்டகன் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், "சோமாலியாவில் இருக்கும் பெரும்பான்மையான அமெரிக்கப் படைகள் 2021ஆம் ஆண்டின் தொடக்கத்தில் திரும்பப் பெறப்படும்" என்று தெரிவித்துள்ளது.

ஆப்பிரிக்காவில் தற்போது சுமார் 700 அமெரிக்கா பாதுகாப்பு குழுக்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளன. அல்கொய்தாவின் துணை நிறுவனமான அல்-ஷபாப் என்ற பயங்கரவாத குழுவுக்கு எதிரான போராட்டத்தில் உள்ளூர் படைகளுக்கு அமெரிக்கப் படைகள் பயிற்சி அளித்துவருகின்றன.

ட்ரம்ப் சமீபத்தில் ஆப்கானிஸ்தான், ஈராக்கில் உள்ள அமெரிக்கப் படைகளைத் திரும்பப்பெற உத்தரவிட்டார். அப்போதே சோமாலியாவிலிருந்து அனைத்துப் படைகளையும் திரும்பப் பெற ட்ரம்ப் உத்தரவிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், அமெரிக்கா பாதுகாப்புச் செயலரான கிறிஸ்டோபர் மில்லர் கடந்த வாரம் சோமாலியாவுக்குச் சென்று அமெரிக்கப் படைகளைச் சந்தித்தார்.

அமெரிக்க அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜோ பைடன் ஜனவரி 20ஆம் தேதி பதவியேற்கிறார். அதன் பிறகே சோமாலியாவிலிருந்து அமெரிக்கப் படைகள் முற்றிலும் வெளியேற்றப்படுமா என்பது தெரியவரும்.

சோமாலியாவில் வரவிருக்கும் தேர்தல்கள், அண்டைநாடான எத்தியோப்பியாவில் மோதல்கள் அதிகரித்துவருவதால், இந்தச் சமயத்தில் படைகளைத் திரும்பப் பெறுவது மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.

சோமாலியாவிலிருந்து படைகளைத் திரும்பப்பெறும் முடிவு, அந்நாட்டில் பயங்கரவாத எதிர்ப்புக்கு எதிராக அமெரிக்கப் படைகள் மேற்கொண்டு நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளியாக அமையாது. இந்த முடிவின் விளைவாக, சில படைகள் கிழக்கு ஆப்பிரிக்காவிற்கு வெளியே மீண்டும் நியமிக்கப்படலாம்.

இருப்பினும், சோமாலியாவில் செயல்படும் வன்முறை, பயங்கரவாத அமைப்புகளுக்கு கொடுக்கப்பட்டுவரும் அழுத்தத்தைத் தக்கவைக்க அமெரிக்கா கூட்டுப்படைகள் சோமாலியாவிலிருந்து அண்டை நாடுகளுக்கு மாற்றப்படும்" என்று பெண்டன் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: கரோனா தடுப்பு மருந்தை எடுத்துக்கொள்வது கட்டாயமாக்கப்படாது - ஜோ பைடன்

ABOUT THE AUTHOR

...view details