தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

ஈரான் விவகாரம்: ட்ரம்ப், நெதன்யாஹு ஆலோசனை! - பெஞ்சமின் நெதன்யாஹு

வாஷிங்டன்: அமெரிக்க- ஈரான் இடையே தொடர்ந்து பதற்றமான சூழல் நீடித்துவரும் நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹு, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஆலோசித்ததாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

ட்ரம்ப், நெதன்யாஹூ ஆலோசனை

By

Published : Jul 12, 2019, 11:05 AM IST

2015ஆம் ஆண்டு ஈரானுக்கும் - அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி, ரஷ்யா, சீனா, பிரான்ஸ், ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றிற்கும் இடையே அணுசக்தி ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில், 2018ஆம் ஆண்டு இந்த ஒப்பந்தத்திலிருந்து விலகுவதாக அமெரிக்கா அதிபர் ட்ரம்ப் அறிவித்தார்.

2015ஆம் ஆண்டு அணுசக்கி ஒப்பந்தம் போடப்பட்டபோது

மேலும், அந்நாட்டின் மீது பல்வேறு பொருளாதாரத் தடைகளையும் அமெரிக்கா விதித்தது. இதற்குப் பதிலடி தரும் வகையில், அணுசக்தி ஒப்பந்தத்தை மீறப்போவதாக ஈரான் அறிவித்திருந்தது. இதைத் தொடர்ந்து, ஈரான் அதிபர் ஹசன் ரவ்ஹானி, ட்ரம்ப் இடையே வார்த்தைப் போர் மூண்டது.

இதனையடுத்து, வளைகுடா பகுதியில் அமெரிக்க படை நிலைநிறுத்தப்பட்டதால், பதற்றம் மேலும் அதிகரித்தது. இதற்கிடையே, சமீபத்தில் ஈரான் வான் பரப்பில் சுற்றிய அமெரிக்காவின் ஆளில்லா விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது அமெரிக்காவுக்கு எரிச்சலை உண்டாக்கியது.

இத்தகைய சூழலில், அணுசக்தி ஒப்பந்தத்தை மீறும் விதமாக, 3.67 விழுக்காடு அளவிற்குச் செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை தயாரிக்கப்போவதாக ஈரான் அறிவித்திருந்தது. இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த ட்ரம்ப், ஈரான் மீது பல்வேறு பொருளாதாரத் தடை விதிக்கப்படும் என்று தெரிவித்தார்.

ட்ரம்ப் (இடது), ஹசன் ரவ்ஹானி(வலது)

இந்நிலையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹு, ட்ரம்ப் ஆகியோர் தொலைபேசி வாயிலாக ஆலோசித்ததாக வெள்ளை மாளிகை அறிக்கை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக, நெதன்யாஹு தனது ட்விட்டர் பக்கத்தில், 'அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்புடன் பேசினேன்.

இருநாடுகளுக்கிடையிலான வளர்ச்சி, பாதுகாப்பு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து ஆலோசித்தோம். இந்தப் பேச்சுவார்த்தையில் ஈரான் விவகாரம் மிக பிரதானமாக இடம்பெற்றது. ஈரான் மீதான பொருளாதாரத் தடைகளை உயர்த்த வேண்டும் என்ற எண்ணம் கொண்டுள்ள அதிபர் ட்ரம்ப்புக்கு நன்றி தெரிவித்தேன்' எனப் பதிவிட்டுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details