தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

வியட்நாமில் டிரம்ப்-கிம் மீண்டும் சந்திப்பு

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்-ஐ வருகிற பிப்.27, 28 ஆகிய தேதிகளில் சந்திக்க உள்ளார்.

Donald

By

Published : Feb 6, 2019, 11:24 AM IST

அமெரிக்காவுக்கும் வடகொரியாவுக்கும் இடையே உரசல் இருந்துவந்த நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்ப், வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் உடன் சில மாதங்களுக்கு முன் அமைதி பேச்சுவார்த்தையை தொடங்கிவைத்தார்.

இந்நிலையில், இன்று நடைபெற்ற அமெரிக்க நாடாளுமன்ற கூட்டுத்தொடரில் டிரம்ப் சிறப்புரையாற்றுகையில், மாபெரும் திருப்பமாக உலக அரசியல் நோக்கர்களால் பார்க்கப்பட்ட எங்களின் (டிரம்ப்-கிம்) சந்திப்பு மீண்டும் நடைபெற உள்ளது என தெரிவித்தார்.

இந்த சந்திப்பு வருகின்ற பிப்ரவரி 27, 28 ஆகிய தேதிகளில் வியட்நாம் தலைநகர் ஹனாயில் நடைபெற உள்ளது என குறிப்பிட்ட அவர், வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்-இடம் அணு ஆயுதங்கள் அனைத்தையும் கைவிட வலியுறுத்துவோம் என கூறினார்.

இந்த சந்திப்பு மூலம் அமெரிக்க-வடகொரியா இடையே அமைதியும், நல்லுறவும் மேம்படும் என உலக அரசியல் நோக்கர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.

ABOUT THE AUTHOR

...view details