கடந்த 6-ம் தேதி வடகொரியாவிற்கு சென்ற அமெரிக்க தூதர் Stephen Biegun பியோங்யாங்கில் வடகொரிய அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார், இரண்டு நாட்களாக நடந்து வந்த பேச்சுவார்தை இரண்டாவது தலைமை உச்சிமாநாட்டிற்கு வழிவகுத்தாக தெரிவிக்கப்படுள்ளது. இந்நிலையில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தனது டிவிட்டர் பக்கத்தில் இந்த சந்திப்பு மிகவும் பயனுள்ள சந்திப்பாக இருந்ததாக தெரிவித்துள்ளார்.
இரண்டாவது முறையாக வடகொரிய அதிபர் கிம் ஜாங்கை சந்திக்கிறார் ட்ரம்ப்! - அமெரிக்க தூதர்
'அமெரிக்க தூதரகம் வட கொரிய அதிகாரிகளுடன் மிகவும் பயனுள்ள சந்திப்பை நிகழ்த்தியதாக' அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
மேலும் வட கொரிய தலைவரான கிம் ஜாங்-ஐ வியட்நாமின் தலைநகரான ஹனோய் நகரில் வரும் 27 மற்றும் 28 சந்திக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெற்ற "ஸ்டேட் ஆப் யூனிட்டி" உரையில் இதனை ஏற்கனவே குறிப்பிட்டிருந்த நிலையில் இன்று அதனை உறுதி செய்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள மற்றோரு ட்வீட்டில், வட கொரியா, கிம் ஜோங்கின் தலைமையின் கீழ், ஒரு பெரிய பொருளாதார அதிகார மையமாக மாறும். இது சிலரை ஆச்சரியப்படுத்தலாம், ஆனால் அவர் என்னை ஆச்சரியப்படுத்த மாட்டார், ஏனென்றால் நான் அவரை அறிந்திருக்கிறேன், அவர் எவ்வளவு திறமையானவர் என்பதை முழுமையாக புரிந்துவைத்திருக்கிறேன் என்று புகழாரம் சூடிய ட்ரம்ப் வட கொரியா ஒரு பொருளாதார ராக்கெடாக மாறும் என நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.