தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

‘அமெரிக்க படைகளை அழிக்க ரஷ்யா திட்டம்’ - புரளி என அமெரிக்க அதிபர் விளக்கம்! - அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விளக்கம்

வாஷிங்டன்: ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்க படைகளை ரஷ்யா அழிக்க திட்டமிட்டுள்ளதாக வந்த தகவல் புரளி என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் விளக்கமளித்துள்ளார்.

‘அமெரிக்க படைகளை அழிக்க ரஷ்யா திட்டம்’  -புரளி என அமெரிக்க அதிபர் விளக்கம்!
‘அமெரிக்க படைகளை அழிக்க ரஷ்யா திட்டம்’ -புரளி என அமெரிக்க அதிபர் விளக்கம்!

By

Published : Aug 1, 2020, 11:27 AM IST

ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்க படைகளை அழிக்க ரஷ்யா தலிபான்களுக்கு பணம் அளித்துள்ளதாக தகவல் பரவிவந்தது.

இதனையடுத்து அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் புயல், கரோனா பரவல் குறித்தான வட்டமேசை மாநாட்டில் பேசிய அதிபர் டொனால்ட் ட்ரம்ப், “இந்தத் தகவல் குறித்து எனது கவனத்திற்கு எடுத்துவரபடவில்லை. அப்படி என் கவனத்திற்கு கொண்டுவந்திருந்தால் எதாவது நடவடிக்கை எடுத்திருப்பேன்” என்றார்.

அமெரிக்க அதிபர் விளக்கம்!

மேலும் பேசிய அவர், “ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்க படைகளை ரஷ்யா அழிக்க திட்டமிட்டுள்ளதாக வந்த தகவல் புரளி, இதுவரை தன்னை காட்டிலும் ரஷ்யா, சீனாவுடன் எந்த அதிபர்களும் கடுமையாக இருக்கவில்லை” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க...'ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை வெளிநாட்டு விமான சேவைக்கு நோ சான்ஸ்!'

ABOUT THE AUTHOR

...view details