தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

'அநியாயத்தை பார்த்து சும்மா இருக்க மாட்டேன்..!' - கர்ஜித்த ட்ரம்ப்! - அதிபர் மதுரோ

வாஷிங்டன்: இனி வெனிசுலா விவகாரத்தில் எனது நிர்வாகம் கண்டிப்பாக தலையிடும்... அப்போது அந்நாட்டு அதிபர் மதுரோவின் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என ட்ரம்ப் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

Trump administration

By

Published : Mar 24, 2019, 2:43 PM IST

Updated : Mar 24, 2019, 7:01 PM IST

வெனிசுலாவில் அரசியல் குழப்பத்தால் அண்டை நாடுகளுக்கு அச்சுறுத்தல்?

வெனிசுலா நாட்டில் அதிபரான நிகோலஸ் மதுரோவின் பதவிக்காலம் முடியும் முன்னரே எதிர்கட்சித் தலைவரான ஜுவான் குவைடோ தன்னை இடைக்கால அதிபராக அறிவித்துக்கொண்டார்.

இதனால் அங்கு கடுமையான உள்நாட்டு குழப்பம் நிலவிவருகிறது. இது லத்தீன் அமெரிக்க நாடுகளின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக அமெரிக்கா கூறிவருகிறது.

அநியாயத்தை பார்த்து சும்மா இருக்கமாட்டேன்...! - பொங்கியெழுந்த ட்ரம்ப்

இந்நிலையில் வெனிசுலாவைச் சுற்றியுள்ள ஐந்து நாடுகளின் தலைவர்களை புளோரிடா மாகாணத்தில் சந்தித்த ட்ரம்ப் அவர்களுக்கு ஆதரவு தெரிவித்தார்.

இது குறித்து ட்ரம்ப் கூறுகையில், மதுரோவின் சர்வாதிகார ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்றார். தனது அரசுக்கு எதிராக குரல் கொடுப்பவர்களை மதுரோ கடத்துவது, துன்புறுத்தி கொலை செய்துவருவது போன்ற செயல்களை அமெரிக்கா வேடிக்கை பார்க்காது என்று எச்சரித்த அவர், இனி வெனிசுலா விவகாரத்தில் எனது நிர்வாகம் கண்டிப்பாக தலையிடும் என உறுதிபட தெரிவித்தார்.

வெனிசுலாவில் மீண்டும் மக்களாட்சி - ட்ரம்ப் உறுதி

ஜமைக்கா, பஹமா, ஹைதி, டொமினிகன் குடியரசு நாடுகளின் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய அதிபர் ட்ரம்ப், வெனிசுலா நாட்டில் மீண்டும் மக்கள் ஆட்சி திரும்பத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றுநம்பிக்கை தெரிவித்தார்.

Last Updated : Mar 24, 2019, 7:01 PM IST

ABOUT THE AUTHOR

...view details