தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

கரோனா பாதிப்பிலிருந்து மீண்ட ஜஸ்டின் ட்ரூடோ மனைவி! - கரோனாவிலிருந்து மீண்ட ஜஸ்டின் ட்ரூடோவின் மனைவி

ஒட்டாவா: கனடா நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் மனைவி சோஃபி கிரேகோயர் கோவிட்-19 வைரஸ் தொற்றிலிருந்து முழுமையாக குணமடைந்துள்ளார்.

Trudeau
Trudeau

By

Published : Mar 29, 2020, 10:29 PM IST

கோவிட்-19 வைரஸ் தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு வைரஸ் தொற்று இருப்பது சில நாள்களுக்கு முன் உறுதி செய்யப்பட்டது.

அதேபோல வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட ஸ்பெயின் இளவரசி மரியா தெரசே ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 29) உயிரிழந்தார்.

இந்நிலையில் கோவிட்-19 வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுவந்த கனடா நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் மனைவி சோஃபி கிரேகோயர் பூரண குணடைந்துள்ளார்.

முன்னதாக, இங்கிலாந்து சென்று திரும்பிய ஜஸ்டின் ட்ரூடோவின் மனைவி சோஃபி கிரேகோயருக்கு கோவிட்-19 வைரஸ் தொற்று இருப்பது மார்ச் 12ஆம் தேதி உறுதி செய்யப்பட்டது.

அதைத்தொடர்ந்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவந்தது. இதையடுத்து ஜஸ்டின் ட்ரூடோ மற்றும் அவர்களது மூன்று குழந்தைகளுக்கு கரோனா தொற்று சோதனை நடத்தப்பட்டது.

இதில் அவர்களுக்கு வைரஸ் தொற்று இல்லை என்பது உறுதியானது. இது தொடர்பாக பேசிய ஜஸ்டின் ட்ரூடோ, "எனது மனைவி சோஃபி தற்போது நலமாக உள்ளார். தற்போது எனது குழந்தைகளும் நானும் நன்றாக உணர்கிறோம்" என்றார். இருப்பினும் அனைத்து கனடா குடிமக்களும் தொடர்ந்து சில வாரங்கள் வீட்டிலேயே இருக்கும்படி அறிவுறுத்தினார்.

கனடாவில் இதுவரை ஐந்து ஆயிரத்து 655 பேருக்கு கோவிட்-19 வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் 63 பேர் உயிரிழந்துள்ளரனர்.

இதையும் படிங்க: இத்தாலியில் 10,000 தாண்டியது கரோனா உயிரிழப்பு!

ABOUT THE AUTHOR

...view details