தமிழ்நாடு

tamil nadu

By

Published : Nov 8, 2020, 12:11 PM IST

ETV Bharat / international

அமெரிக்காவை மீட்டுருவாக்கம் செய்யும் நேரம் வந்துவிட்டது: ஜோ பைடன்

தேர்தல் வெற்றிக்குத் தனது ஆதரவாளர்கள் மத்தியில் ஜோ பைடன் உரையாற்றினார். அதில், அமெரிக்காவை சீர்படுத்தும் நேரமிது என்றும்; மக்கள் பாதுகாப்புக்கே முன்னுரிமை என்றும் தெரிவித்துள்ளார்.

US President elect Joe Biden
US President elect Joe Biden

வாஷிங்டன் (அமெரிக்கா): அமெரிக்க அதிபர் தேர்தலில் 4 நாள்களாக நீடித்த இழுபறி முடிவுக்கு வந்தது. 284 வாக்குகள் பெற்று ஜோ பைடன் வெற்றி பெற்றார். கமலா ஹாரிஸ் துணை அதிபராக தேர்வு செய்யப்பட்டார். தேர்தல் வெற்றிக்குத் தனது ஆதரவாளர்கள் மத்தியில் ஜோ பைடன் உரையாற்றினார்.

அப்போது, 'ஒட்டுமொத்த அமெரிக்காவும் அநீதிக்கு எதிராக நின்றுள்ளது. அமெரிக்காவை மீட்டெடுப்பதற்கான நேரம் இது. என்மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையைக் காப்பாற்றுவேன். இந்த வெற்றி மூலம் நாட்டு மக்கள் தங்கள் குரலை வெளிப்படுத்தியிருக்கின்றனர்.

இதைவிட சிறந்த நாள் வருமென்று நம்பிக்கையுடன் காத்திருக்கிறார்கள். உலக அரங்கில் அமெரிக்காவின் மரியாதையை உயர்த்த உழைப்போம். நான்கு ஆண்டுகளாக சமத்துவம், சம உரிமைக்காக நாம் போராடி வந்தோம். கரோனா காலத்திலும் கட்சிக்காகவும் வெற்றிக்காகவும் உழைத்தவர்களுக்கு நன்றி.

ஆட்சி பொறுப்பேற்றவுடன் நமது திட்டங்கள் அனைத்தும் அறிவியல் பூர்வமாக இருக்கும். கரோனாவைக் கட்டுப்படுத்துவதற்கே முன்னுரிமை. அமெரிக்காவில் ஒவ்வொருவரின் பாதுகாப்பே எனது இலக்கு. எந்த பேதமும் இல்லாமல் அனைத்துத் தரப்பு மக்களும் நம்மை ஆதரித்து இருக்கிறார்கள்.

அமெரிக்க அதிபராக தேர்வாகியுள்ள ஜோ பைடன் உரை

வாய்ப்புகள் அனைவருக்கும் பகிர்ந்தளிக்கப்படும். நாடாளுமன்றத்தில் அனைவரும் ஒன்றிணைந்து ஆக்கப்பூர்வமாகச் செயல்பட வேண்டும். நம்மால் முடியும் என்ற முழக்கத்துடன் ஒபாமா ஆட்சிக்கு வந்தார். அவருடன் நான் இருந்தேன். யாரையும் கைவிடாத அமெரிக்காவை நாம் உருவாக்கப் போகின்றோம். அனைத்து அமெரிக்கர்களுக்குமான அதிபராக இருப்பேன்’ எனத் தெரிவித்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details